- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் நடிகராக மாறிய பிரபல தயாரிப்பாளர் - அஜீத்குமார் நடிக்கும் டேர் டெவில் படத்தில்...

தமிழ் சினிமாவில் நடிகராக மாறிய பிரபல தயாரிப்பாளர் – அஜீத்குமார் நடிக்கும் டேர் டெவில் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் டைரக்டர் ஆவதும் டைரக்டர்கள் ஹீரோவாக மாறுவதும் வழக்கமாக நடப்பதுதான். நடிகர்கள் நடிகைகள் மற்றும் இயக்குனர்களின் வாரிசுகள் நடிக்க வருகின்றனர். அல்லது படம் டைரக்ட் செய்கின்றனர். தயாரிப்பாளர்களின் மகன்கள் கூட சினிமாவில் நடிக்கவோ படம் இயக்கவோ அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். இவர் ஏராளமான தமிழ் படங்களை தயாரித்துள்ளார். இப்போதும் அவரது தயாரிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன. படங்களை தயாரிப்பது மட்டுமின்றி தமிழ்நாடு கேரளா என படங்களை வினியோகம் செய்யும் வினியோகஸ்தராகவும் உள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே சில படங்களில் தயாரிப்பாளர் ராகுல் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தும் இருக்கிறார். இந்த நிலையில் ரைட்டர் படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் பிராங்க்லின் அடுத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை தயாரிப்பது ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்தான்.

இவர் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சத்ரியன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்போது இவரது தயாரிப்பில் பிராங்க்லின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் ராகுல் நடிக்கிறார்.

- Advertisement -

அதாவது இந்த படத்தில் 3 ஹீரோக்கள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் இளைய திலகம் நடிகர் பிரபு. பிக்பாஸ் பிரபலம் விஜய் வர்மா நடிக்கிறார். அத்துடன் ஒரு முதன்மையான கேரக்டரில் ராகுலும் நடிக்கிறார். இதில் 3 ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக அவர் நடிப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் நடிகர் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றை சித்தார்த் என்பவர் டைரக்ட் செய்கிறார்.

தங்க மார்க்கெட்டை மையக்கதையில் அது உருவாகிறது. அந்த படத்துக்கு சிட்டி ஆஃப் கோல்டு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் தயாரிப்பாளரும் ராகுல்தான். இந்த படத்தின் மெயின் வில்லனாக நடிக்கிறார். மேலும் அஜீத்குமார் தயாரித்து நடிக்கும் டேர் டெவில் படத்திலும் ராகுல் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்று இந்த தகவலை வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்