- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக வேட்பாளர் பட்டியலில் திடீரென மாறிய பெயர் - மதுரை சினிமா பிரபலத்தின் மகன் லிஸ்ட்டில்...

தவெக வேட்பாளர் பட்டியலில் திடீரென மாறிய பெயர் – மதுரை சினிமா பிரபலத்தின் மகன் லிஸ்ட்டில் காணாமல் போனது ஏன்? வெளியான சீக்ரெட்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் கடந்த 29ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் தனது கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து அந்த வேட்பாளர்களை மேடையில் அறிமுகப்படுத்தினார்.

அந்த வகையில் தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியிலும் தவெக சார்பில் போட்டியிடும் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அறிவித்த அவர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதில் விஜயின் நீண்ட கால நண்பர் காமெடி நடிகர் ஸ்ரீநாத் மட்டும் தூத்துக்குடியில் தவெக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

- Advertisement -

மதுரையில் முன்னணி சினிமா தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் அன்பு செழியன். அவரது மகன் விவேக் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வேட்பாளராக மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்கிற ஒரு தகவல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

மதுரையை சேர்ந்த அன்பு செழியன் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதால் தனது மகன் விவேக் வெற்றிக்காக 20 கோடி ரூபாய் வரை தேர்தல் களத்தில் செலவு செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் விஜய் அறிவித்த தவெக வேட்பாளர் பட்டியலில் மதுரை தெற்கு தொகுதிக்கு தவெக வேட்பாளராக விவேக் அறிவிக்கப்படாமல் வேறு ஒரு நிர்வாகி அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

திடீரென தவெக வேட்பாளர் பட்டியலில் இருந்து விவேக் பெயர் காணாமல் போனது ஏன் என்பதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது விஜய் தவெக வேட்பாளர் பட்டியல் பெயர்களை அறிவிப்பதற்கு முந்தைய நாள் இரவு வரை விவேக் தான் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளராக இருந்துள்ளார்.

ஆனால் அன்று இரவு தகவலறிந்த முக்கிய கட்சி வட்டாரத்தில் இருந்து சினிமா தயாரிப்பாளர் அன்புசெழியனுக்கு போன் வந்துள்ளது. அதில் உங்கள் மகன் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் அந்த கட்சியில் வேட்பாளராக இருக்கலாமா என அழுத்தம் தரப்பட்டுள்ளது. அதன்பிறகு தான் தவெக தலைமைக்கு தகவல் சென்ற நிலையில் தவெக வேட்பாளர் பட்டியலில் இருந்து அன்புசெழியன் மகன் விவேக் பெயர் நீக்கப்பட்டதாக வலைப்பேச்சு பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்