- Advertisement -
Homeபொழுதுபோக்குலேடி சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்லாத ஒன்று, அது அவமானம்; நடிகை நயன்தாராவை மறைமுகமாக குத்திக்காட்டிய...

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்லாத ஒன்று, அது அவமானம்; நடிகை நயன்தாராவை மறைமுகமாக குத்திக்காட்டிய ரஜினி பட நடிகை – அடுத்த பஞ்சாயத்து ரெடியா?

- Advertisement -

சினிமாவில் நடிக்க வந்து, சில படங்கள் பெரிய வெற்றியை கொடுத்துவிட்டால் அவர்களுக்கான பட்டப்பெயர் வந்துவிடுகிறது. சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தளபதி, புரட்சித் தளபதி, புரட்சித் தமிழன், மக்கள் செல்வன், சுப்ரீம் ஸ்டார், இளையதிலகம், நவசர நாயகன், ஆக்சன் கிங் என்பதெல்லாம் இப்போதுள்ள நடிகர்களின் பட்டம் பெயர்தான். இதுவே அவர்கள் யார் என சொல்லிவிடும்.

சமீபகாலமாக நடிகை நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர். ஆனால் துவக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி தான். வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் அவர் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்த நிலையிலும், மன்னன் படத்தில் ரஜினிக்கு மனைவியாக வில்லி கேரக்டரிலும் நடித்ததால் அவருக்கு இந்த பெயர் பொருத்தமாகவும் இருந்தது.

- Advertisement -

ஆனால் அவருக்கு பிறகு இப்போது மிக பிரபலமாக இந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பொருந்தியிருப்பது நடிகை நயன்தாராவுக்குதான். இதற்கு காரணம், இப்போது தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை அதிக சம்பளம் ஒரே நடிகையாக இருப்பது நயன்தாராதான். அதற்கு அடுத்தபடியாக திரிஷா அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

அதனால் நயன்தாராவுக்கு போட்டியாளராக நடிகை திரிஷா தான் கூறப்படுகிறார். நயன்தாரா நடிக்க மறுக்கும் சில படங்களில் திரிஷா தான் அடுத்த சாய்ஸ் ஆக இருக்கிறார். மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை, மாசாணி அம்மன் என்ற பெயரில், ஆர்ஜே பாலாஜி எடுக்க உள்ள நிலையில், அந்த படத்தில் திரிஷா தான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியார். ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள வேட்டையன் படத்தில் மஞ்சுவாரியார் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் மஞ்சுவாரியார் தன் கருத்துகளை வெளிப்படையாக கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

என்னை சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைப்பது, சமூக வலைதளங்களில் தேவையில்லாத விவாத பொருளாக மாறி வருகிறது. இது தனிப்பட்ட முறையில் எனக்கு அவமானமாக உள்ளது. இந்த பட்டத்துக்கு என சில வரைமுறைகளை வைத்திருக்கும் நிலையில், உண்மையில் எனக்கு எந்த பட்டமும் வேண்டாம். ரசிகர்களின் அன்பு ஒன்றே போதும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்