- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் 173 படத்தில் இருந்து இயக்குனர் சுந்தர் சியை தொடர்ந்து சிபி சக்ரவர்த்தியும் படத்தை...

தலைவர் 173 படத்தில் இருந்து இயக்குனர் சுந்தர் சியை தொடர்ந்து சிபி சக்ரவர்த்தியும் படத்தை விட்டு விலகினாரா? – புது டைரக்டர் இவரா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்து தலைவர் 173 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தை அவரது நண்பர் நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

முதலில் இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ரஜினி நடித்த அருணாசலம் கமல் நடித்த அன்பே சிவம் படங்களை இயக்கிய சுந்தர் சி இந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டதால் ரசிகர்களும் உற்சாகமாகினர்.

- Advertisement -

ஆனால் திடீரென இயக்குனர் சுந்தர் சி இந்த படத்தை விட்டு விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தை விட்டு வெளியேறுவதாக அவர் அறிவித்தார். அவர் சொன்ன கதையில் ரஜினிக்கு திருப்தி இல்லாத நிலையில் சுந்தர் சி விலகியதாக கூறப்பட்டது.

அதன்பிறகு டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இந்த படத்தை இயக்க உள்ளதாக வீடியோவுடன் அறிவிப்பு வெளியானது. சாய் அபயங்கர் இசை, வருகிற 2027 பொங்கல் வெளியீடு என்றும் தெரிவிக்கப்பட்டது. வருகிற 27ம் தேதி ஷூட்டிங் துவங்கும் என கூறப்பட்ட நிலையில் அதுவும் இப்போது சிக்கலாகி உள்ளது.

- Advertisement -

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தெலுங்கு படம் ஒன்றை இயக்க கமிட் ஆகி அதற்காக அட்வான்ஸ் தொகை வாங்கியிருக்கிறார். அதை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். மேலும் படத்தின் ப்ரீ புரடக்சன்ஸ் பணிக்காக செலவு செய்த தொகைகளையும் சிபி சக்ரவர்த்தியே மொத்தமாக திருப்பித் தர வேண்டும் என்று அந்த தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனம் பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது.

ஆனால் வாங்கிய அட்வான்ஸ் மட்டுமே திருப்பித் தருவேன். வட்டி ப்ரீ புரடக்சன்ஸ் செலவு எல்லாம் தர மாட்டேன் என சிபி சக்ரவர்த்தி மறுத்துள்ள நிலையில் இந்த விவகாரம் பெரிதாகி உள்ளது. அதனால் ரஜினி நடிக்கும் தலைவர் 173 படத்தை சிபி சக்ரவர்த்திக்கு பதிலாக டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்