- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட்வான்ஸ் வாங்கிய விவகாரம்; நடிகர் ரவிமோகன் ரூ. 5.90 கோடி சொத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய...

அட்வான்ஸ் வாங்கிய விவகாரம்; நடிகர் ரவிமோகன் ரூ. 5.90 கோடி சொத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு!

- Advertisement -

கடந்த ஆண்டில் பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகர் ரவி மோகனை ஹீரோவாக வைத்து அடுத்தடுத்து 2 படங்கள் தயாரிக்க முன்வந்து ஒப்பந்தம் செய்தது. இதற்காக கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த நிறுவனம் நடிகர் ரவி மோகனை ஒப்பந்தம் செய்தது. இதற்காக முதல் படத்துக்கு 15 கோடி ரூபாய் ஊதியம் பேசப்பட்டு 6 கோடி ரூபாய் அட்வான்ஸ் தரப்பட்டது.

ஆனால் பேசியபடி தங்களது நிறுவனத்தின் படங்களில் நடிக்க நடிகர் ரவிமோகன் முன்வரவில்லை. மேலும் அவரே சொந்தமாக ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களில் நடித்து வருகிறார். அதனால் எங்களிடம் அவர் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர வேண்டும் என்று அந்த தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

- Advertisement -

புதிய படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி தராத விவகாரத்தில், நடிகர் ரவி மோகன் 5.90 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இப்போது உத்தரவிட்டுள்ளது. புதிய படம் ஒன்றில் நடிப்பதற்காக பாபி டச் கோல்ட் யுனிவர்சல் என்ற படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நடிகர் ரவி மோகனுக்கு 6 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருந்தது.

இதற்காக 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படத்தை அந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கவில்லை. ஆனால் இப்போது கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்கிறது. இதனால் மற்ற படங்களில் நான் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் தனக்கு அந்த படத் தயாரிப்பு நிறுவனம் 9 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டு நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

- Advertisement -

மேலும் தயாரிப்பு நிறுவனமான பாபி டச் கோல்ட் யுனிவர்சல் சார்பில் நடிகர் ரவிமோகன் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த பிரச்சினையில் நடிகர் ரவி மோகன் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப அளிப்பதில் என்ன சிரமம் உள்ளது? இதனால் எதிர்மறையான விளம்பரம் தான் கிடைக்கும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கில் நடிகர் ரவி மோகன் 5.90 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இது தரப்பினருக்கும் இடையேயான இந்த பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தரை நியமித்தும் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்