சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு முதல் படத்தையே படு ஜாலி ஜானரில் கொடுத்து அப்ளாஸை அள்ளினார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய சரோஜா படம் மெகா ஹிட்டாக அடுத்ததாக இயக்கிய கோவா திரைப்படம் தோல்வியடைந்தது. இதனால் வெங்கட் பிரபுவின் கரியர் முடிந்துவிட்டதாக பலரும் பேசினார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான் அஜித்தின் 50ஆவது படமான மங்காத்தா படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் வெங்கட் பிரபு. ஆனால் அஜித்தை வைத்து வெங்கட் பிரபு காமெடிதான் செய்யப்போகிறார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதிலும் அஜித்தின் கரியரில் மிகப்பெரிய ஹிட் படமாக அது அமைந்தது. அந்தப் படத்திலிருந்து வெங்கட் பிரபுவுக்கான டிமாண்டும் ஏறியது. இப்போது அவர் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கிவருகிறார்.
இந்நிலையில் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு குறித்து பேசுகையில், “மங்காத்தா படத்தின் அறிவிப்பு வெளியானபோது ரசிகர்கள் அனைவரும் கிண்டல் செய்தார்கள். இதனால் டென்ஷனான வெங்கட் பிரபு ஒருகட்டத்தில் அஜித்திடம் நேராக சென்று மங்காத்தா படத்தை ட்ராப் செய்திர்டலாம் என சொன்னார். மேலும் இது உங்களுக்கு 50ஆவது படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனை என்னால் செய்ய முடியாது என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். எனவே எனக்கு இது செட் ஆகாது என்று புலம்பினார்.
இதனை கேட்டு சிரித்த அஜித், உங்களால் முடியும் என்று நம்பிக்கை கொடுத்தார் அதன் பிறகு மங்காத்தா ஷூட்டிங் தொடங்கியது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தின் ஒரு காட்சியில் விஜய்யின் பாட்டை வையுங்கள் என்று அஜித்தான் வெங்கட் பிரபுவிடம் சொன்னார். அதுமாதிரி மங்காத்தா படத்தை பார்த்த விஜய் இந்தக் கதையை என்னிடம் சொல்லியிருந்தால் அர்ஜுன் கேரக்டரில் நானே நடித்திருப்பேன் என சொல்லியிருந்தார்.
வெங்கட் பிரபு மீது எப்போதும் அஜித்துக்கு பாசம் உண்டு. அதனால் தன்னுடைய 62ஆவது படத்தை இயக்கும் இயக்குநர்கள் லிஸ்ட்டில் அவரது பெயரையும் வைத்திருந்தார் அஜித். ஆனால் கங்கை அமரனோ ஒரு பேட்டியில் விஜய் – அஜித்தை வைத்து வெங்கட் பிரபு இயக்குவார் என்று பேசிவிட்டார். இதை அஜித் விரும்பவில்லை என தெரிகிறது. அதனால் கோபமான அஜித் லிஸ்ட்டிலிருந்து வெங்கட் பிரபு பெயரை தூக்கிவிட்டார்.
அஜித்தை பொறுத்தவரை தன்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தாலும் தன்னை பற்றி தன்னுடைய அனுமதி இல்லாமல் பேசக்கூடாது என்பதுதான் எண்ணம். கங்கை அமரன் அப்படி பேசியதால்தான் வெங்கட் பிரபு மீது கோபமடைந்தார் என்று திரைத்துறையில் பேசுகிறார்கள்” என்றார்.





