- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த புரிதல் இருப்பவர்கள் மட்டுமே, திரைப்படங்களை தயாரிக்க வரவேண்டும் - என்னங்க, இவரும் விஷால் ஸ்டைல்ல...

இந்த புரிதல் இருப்பவர்கள் மட்டுமே, திரைப்படங்களை தயாரிக்க வரவேண்டும் – என்னங்க, இவரும் விஷால் ஸ்டைல்ல இப்புடி சொல்லிப்புட்டாரு

- Advertisement -

கடந்த 20,30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகையர் யார் என ரோட்டோரங்களில், முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சினிமா போஸ்டர்களை பார்த்து தெரிந்துக்கொண்டு தான், ரசிகர்கள் தியேட்டர்களுக்குச் சென்றனர். ஒரு கட்டத்துக்கு பிறகு, இசையமைப்பாளர் யார் என்றும், ரசிகர்கள் கவனிக்கத் துவங்கினர்.

இப்போதெல்லாம், படத்தின் இயக்குநர் யார் என்பதை பார்த்துவிட்டுதான் ரசிகர்கள் பலரும், அந்த படத்தை பார்க்கலாமா, வேண்டாமா என முடிவுக்கு வருகின்றனர். லியோ படத்துக்கு, முன்பில்லாத அளவுக்கு இவ்வளவு எதிர்பார்ப்பும், ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க காரணம், விஜய் நடித்த படம் என்பதையும் தாண்டி, இது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதுதான்.

அப்படி இயக்குநர்களை கொண்டாடும் இன்றைய சினிமா உலகில், ரசிகர்களின் ஆதரவு பெற்ற இயக்குநர்களில் முக்கியமான ஒருவர்தான் அமீர். மவுனம் பேசியதே, ராம் படங்களை தொடர்ந்து பருத்தி வீரன் படத்தில் மிக மிக பரபரப்பாக பேசப்பட்ட இயக்குநர். வடசென்னை, யோகி உள்ளிட்ட படங்களில் நல்ல நடிகராகவும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் தனது ஓட்டல் திறப்பு விழாவில், செய்தியாளர்களை சந்தித்தார் அமீர்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இயக்குநர் அமீர் கூறியதாவது, சினிமா என்பது வியாபாரம், வர்த்தகம். இதில் பணத்தை முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் லாபத்தை எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. தியேட்டர்களிலும் அதே நிலைமைதான். வருமானம் தருகிற படங்களை வெளியிட்டால்தான், அவர்களும் சம்பாதிக்க முடியும். கரண்ட் பில் கட்ட முடியும். சின்ன படம், பெரிய படம் என்பதை விட, வருமானம் தரும் படங்களை திரையிட்டால் மட்டுமே, தியேட்டர் உரிமையாளர்களும் சமாளிக்க முடியும். இதுதான் அவரவர்களின் உண்மை நிலை.

கடலில்தான் மீன் பிடிக்கிறோம். இதில் மாற்றுக்கருத்து இல்லை. கடலில் தான் மீன் இருக்கிறது. அங்கு பிடிக்கிற எல்லா மீன்களும் ரிலையன்ஸ் ஷோரூமுக்கு போவது இல்லை. ரோட்டுக்கும் விற்பனைக்கு வருகிறது. அதனால், மீனை பிடிக்கிறவர்கள் அதை விற்கிற இடத்தை தான் மாற்றிக்கொள்ள வேண்டும். சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லக் கூடாது.

சின்ன பட்ஜெட் படங்களை எடுத்துவிட்டு, மல்ட்டி பிளக்ஸ் தியேட்டரில் அதை திரையிட்டால், 190 ரூபாய் கொடுத்து படம் பார்க்க ரசிகர்கள் வரவேண்டுமே. அதனால் நமது பொருளை விற்கிற சந்தையை மாற்ற வேண்டும். அந்த புரிதல் இருந்தால் மட்டுமே தயாரிப்புக்கு வரவேண்டும். நானும் இரண்டு படங்களை எடுத்து வைத்திருக்கிறேன். நான் தியேட்டர்களை குறை சொல்வதில்லை. எனக்கு, என் படங்களை எங்குகொண்டு செல்ல வேண்டும் என்பது தெரியும், என்று கூறி இருக்கிறார் அமீர்.

சற்று முன்