- Advertisement -
Homeபொழுதுபோக்குதங்கலானைத் தொடர்ந்து சியான் விக்ரம் இந்த இயக்குனருடன்தான் இணையப் போகிறாரா... வேறு லெவலில் சம்பவம் காத்திருக்கு...

தங்கலானைத் தொடர்ந்து சியான் விக்ரம் இந்த இயக்குனருடன்தான் இணையப் போகிறாரா… வேறு லெவலில் சம்பவம் காத்திருக்கு போங்க…

- Advertisement -

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சியான் விக்ரம் அடுத்ததாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு கோலார் தங்க வயலில் நிகழ்ந்த சம்பவங்களை தொகுத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் அடர்ந்த தாடி, நீண்ட முடி என்ன வித்தியாசமான கெட்டப்பில் சீயான் விக்ரம் காட்சியளிக்கிறார். படத்தில் பசுபதி, பார்வதி மேனன், பிரியங்கா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு கோலார் தங்க வயல் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது.

தங்கலான் படத்தை பொங்கல் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிட பட குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு சியான் விக்ரம் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமலே இருந்தது. ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படத்தில் அவர் வில்லனாகும் வாய்ப்பு கிடைத்தும் அதனை விக்ரம் உதறியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விக்ரமின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் வெளியான சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் உடன்தான் விக்ரம் இணைய உள்ளாராம். ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்த அருண்குமார், பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தை இயக்கி வெள்ளித் திரையில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. ஒரு வாகனத்தையும் அதற்கு பின்னால் இருக்கும் உரிமையாளரின் யதார்த்தமான வாழ்க்கையையும் கண்முன்னே காட்டி இருந்தார் அருண்குமார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி உடன் இரண்டாவது முறையாக சேதுபதி படத்தை இயக்கினார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படமும் வெற்றி வாகை சூடியது.

பின்னர் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் அவர் இணைந்து எடுத்த சிந்துபாத் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதை எடுத்து சித்தார்த்துடன் அவர் இணைந்து சித்தா படத்தை எடுத்தார். குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதற்கு சில தீர்வுகளை இந்த படம் முன் வைத்தது. விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம், நடிகர் சித்தார்த்துக்கும் திருப்புமுனையை கொடுத்தது. இந்த நிலையில் தற்போது சீயான் விக்ரமிடம் அருண்குமார் கதை ஒன்றை கூறியிருக்கிறாராம். அதற்கு விக்ரமும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் இருவரும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்