- Advertisement -
Homeபொழுதுபோக்குதெலுங்கு நடிகர் நானியுடன் சேரப்போகும் டான் இயக்குனர்... வேணாம்... கையெழுத்து போடாதீங்கண்ணே என கலாய்க்கும் ரசிகர்கள்...

தெலுங்கு நடிகர் நானியுடன் சேரப்போகும் டான் இயக்குனர்… வேணாம்… கையெழுத்து போடாதீங்கண்ணே என கலாய்க்கும் ரசிகர்கள்…

- Advertisement -

சீம ராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ என அடுத்தடுத்த தோல்வி திரைப்படங்கள் சிவகார்த்திகேயனை துரத்த, அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது டாக்டர் திரைப்படம். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்தப் படத்தை எடுக்க, பிரியங்கா மோகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டார்க் காமெடி ரகத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

முந்தைய படங்களில் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த சிவகார்த்திகேயன், இதில் அமைதியான கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி வரும் காட்சிகள் எல்லாம் திரையரங்குகளில் சரவெடி வெடிக்க, முதல் முறையாக சிவகார்த்திகேயன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் அள்ளியது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் தான் டான். இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி, டான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கல்லூரி வாழ்க்கை வரை தான் எதிர்காலத்தில் என்னவாக ஆகப்போகிறோம் என்கிற புரிதல் இல்லாமல், பொறுப்பின்றி சுற்றும் இளைஞரின் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தில் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தி இருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். தனது வழக்கமான கவுன்டர் ஜோக்குகளாலும், டைமிங் காமெடியினாலும் டான் எனும் கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்தி இருந்தார் சிவகார்த்திகேயன். படம் முழுவதும் கலகலவென காட்சிகள் நகர, கடைசி அரை மணி நேரத்தில் தந்தையின் உயிரிழப்பு, அதன் பின்னால் இருக்கும் சோகம் என வேறொரு பாதையில் கொண்டு போய் அதில் வெற்றி பெறவும் செய்தார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.

- Advertisement -

சிவகார்த்திகேயனுக்கே உரித்தான குடும்ப ஆடியன்ஸ்கள், கூட்டம் கூட்டமாய் சென்று டான் திரைப்படத்தை பார்க்க, இந்தப் படமும் அவருக்கு 100 கோடி ரூபாய் வசூல் கொடுத்தது. இருப்பினும் சில ரசிகர்களால் டான் திரைப்படம் ஒரு கிரிஞ்ச் என இப்போதும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைய போவதாக தகவல் வெளியானது.

கிட்டத்தட்ட இந்த கூட்டணி முடிவு செய்யப்பட்டு லைகா நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில், சில காரணங்களால் இது நடக்காமல் போனது. இந்நிலையில், சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக நானியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தை, பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்