- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யா அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? - தலைமை ரசிகர் மன்றம் தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கம்!

நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? – தலைமை ரசிகர் மன்றம் தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கம்!

- Advertisement -

சினிமாத்துறையில் இருந்து நடிகர்கள் நடிகைகள் அரசியலுக்கு வருவது பல காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் இருந்தும் திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வந்து ஜெயித்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் தோற்றும் இருக்கிறார்கள்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தை பொறுத்தவரை மிக சாதாரணமான ஒரு விஷயம்தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடங்கி நடிகர் விஜய் வரை பலரும் அரசியலில் என்ட்ரி ஆகி ஜெயித்திருக்கிறார்கள். இப்போது நடிகர் விஜய் முதல்வரான பிறகு இன்னும் பல நடிகர்கள் அரசியலுக்கு வர மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். அதற்கு ஆசைப்பட்டு பல வேலைகளை திரை மறைவில் ரகசியமாக செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கூட சமீபத்தில் அரசியலுக்கு வருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அடுத்ததாக நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு வருகிறார். விரைவில் தனி கட்சி தொடங்குகிறார் என்றும் ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. சமீபத்தில் நடந்த சூர்யா ரசிகர் மன்ற கூட்டத்தில் அரசியல் பேசப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த கூட்டத்தில் பேசிய வீரமணி என்ற ரசிகர் மன்ற நிர்வாகி, சூர்யா அரசியலுக்கு வருவார். இங்கு இருப்பவர்கள் எல்லாம் வருங்கால எம்எல்ஏக்கள் எம்பிக்கள் என்று அவர் பேசி இருக்கிறார். அதற்கு கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் கைதட்டிய நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிறப்பு பேச்சாளராக அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வீரமணி என்பவர் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தெளிவாக குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலை தளங்களில் பரப்பி அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதை யாரும் நம்பவோ பொருட்படுத்தவோ வேண்டாம். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக வீரமணி என்பவர் மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை.

நடிகர் சூர்யாவுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவிதமான எண்ணமும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கு சமூக சேவைகளை செய்வதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளித்து வருகிறது. எனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல் மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்