- Advertisement -
Homeபொழுதுபோக்குகண்ணா லட்டு தின்ன ஆசையா பட காமெடி நடிகர் டெல்லியில் திடீர் கைது - ரூ....

கண்ணா லட்டு தின்ன ஆசையா பட காமெடி நடிகர் டெல்லியில் திடீர் கைது – ரூ. 5 கோடி மோசடி செய்த வழக்கில் போலீசார் அதிரடி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக சில படங்களில் நடித்தவர் சீனிவாசன். இவர் ஒரு அக்குபஞ்சர் டாக்டர். லத்திகா என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரே தனக்கு பவர் ஸ்டார் என அடைமொழி வைத்துக்கொண்டு பவர் ஸ்டார் சீனிவாசன் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்தார்.

தமிழில் பவர் ஸ்டார் சீனிவாசன் கண்ணா லட்டு தின்ன ஆசையா என் படம் நல்ல அடையாளத்தை அவருக்கு பெற்றுத் தந்தது. கே பாக்யராஜ் இயக்கி நடித்த இன்று போய் நாளை வா படத்தின் கதை தழுவலில் இந்த படம் உருவாகி இருந்தது. 3 நண்பர்கள் கதாநாயகியை காதலிக்கும் போட்டியில் சந்தானம் நாயகனாக நடித்திருந்தார். நண்பர்களில் ஒருவராக பவர் ஸ்டார் சீனிவாசனும் நடித்திருந்தார். இதில் காமெடி நடிப்பில் பலத்த வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றார்.

- Advertisement -

தொடர்ந்து ஐ நானே வருவவேன் யாயா உள்ளிட்ட சில படங்களில் காமெடி ரோலில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்திருக்கிறார். ஆனால் பெரிய அளவில் அவர் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாத நிலையில் நிறைய படங்களில் நடிக்க அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. அதே நேரத்தில் சில விளம்பரங்களிலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 1000 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறி, அவரிடம் இருந்து 5 கோடி ரூபாய் பணம் பவர் ஸ்டார் சீனிவாசன் வாங்கியுள்ளார். தொழிலதிபரிடம் சொன்னபடி 1000 கோடி ரூபாய் கடன் பெற்று தரவில்லை. 5 கோடி ரூபாய் பணத்தையும் திருப்பி தரவில்லை. அந்த 5 கோடி ரூபாய்பணத்தை சினிமா தொடர்பாக பவர் ஸ்டார் சீனிவாசன் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதுதொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளியாக இரண்டு முறை அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார். இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் டெல்லியில் இருந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஏற்கனவே நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது நிறைய மோசடி வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஏற்கனவே நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஜெயிலுக்கு சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்