- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசியில் இவருக்கும் ஹீரோ ஆசை வந்திடுச்சே?- திடீரென நடிகராக மாறிய இந்திய கம்யூ., கட்சி முக்கிய...

கடைசியில் இவருக்கும் ஹீரோ ஆசை வந்திடுச்சே?- திடீரென நடிகராக மாறிய இந்திய கம்யூ., கட்சி முக்கிய நிர்வாகி – அப்செட் ஆன கட்சிக்காரர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில அதிசயங்களும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. சினிமா நடிகர்கள் திடீரென அரசியல்வாதிகளாக மாறி விடுகின்றனர். அதுபோல், சில நேரங்களில் அரசியல்வாதிகளும் சினிமாவில் நடிக்க வந்து விடுகின்றனர். அரசியல், சினிமா இரண்டிலுமே பணம், புகழ் உண்டு என்பதால், இரண்டுக்குமே எப்போதும் கிராக்கிதான். போட்டியாக தான் உள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகராக இருந்த எம்ஜிஆர், அரசியலுக்கு வந்து முதலமைச்சரானார். அவர் வழியே ஜெயலலிதாவும் தமிழகத்தை ஆட்சி செய்தார். சினிமா வசனகர்த்தா கருணாநிதி, தமிழக முதல்வராக ஐந்துமுறை ஆட்சி செய்தார். ஆனால், சிவாஜி, பாக்யராஜ், டி ராஜேந்தர் போன்றவர்களால் அரசியலில் பெரியதாக சாதிக்க முடியவில்லை. இப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார். எதிர்காலத்தில் அவரும் முதலமைச்சர் ஆக ஆசைப்படுகிறார். நடிகர் விஜயும் அந்த ஆசையில் இருக்கிறார்.

- Advertisement -

இப்போதைய நடிகர்களில் கமல், சரத்குமார், சீமான், விஜயகாந்த் போன்றவர்களும் அரசியலில் இருக்கின்றனர். இதில் கமல், சீமான் மட்டுமே ஆக்டிவ்வாக களத்தில் இருக்கின்றனர். சரத்குமார் தேர்தல் நேரத்தில் மட்டுமே, களத்தில் தெரிகிறார். மற்ற நேரங்களில் சினிமாவில்தான் கவனம் செலுத்துகிறார். நடிகர் கார்த்திக் ஆரம்பித்த கட்சி, அவரை போலவே மாயமாகி விட்டது. விஜயகாந்துக்கு உடல் நலமில்லாததால், தேமுதிகவை பிரேமலதா கவனித்துக்கொள்கிறார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் திடீர் அதிர்ச்சியாக, ஆச்சரியமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சினிமா நடிகராகி இருக்கிறார். அரிசி என்ற படத்தில், இளைஞனை போன்ற ஒரு தோற்றத்தில் அவர் காட்சியளிக்கிறார். புல் மேக்கப்பில் யாரோ புதியவரை போன்ற அவரது புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

விஜயகுமார் இயக்கத்தில், முத்தரசன் அரிசி என்ற படத்தில் விவசாயி கேரக்டரில் நடிக்கிறார். மோனிகா புரொடக்சன் சார்பில், சண்முகம் இந்த படத்தை தயாரிக்கிறார். கோவி இளங்கோ, சிசர் மனோகர், ரஷியா மாயன், ராஜா திருநாவுக்கரசு, சுபா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார். ஜான்சன் ஒளிப்பதிவாளராக உள்ளார்.

விவசாயி என்ற கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றவுடன் ஒத்துக்கொண்ட முத்தரசன், இந்த படத்தின் கதைக்காக இந்த ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறேன் என சம்மதித்துள்ளார். கும்பகோணம், குடவாசல் பகுதிகளில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அந்த பகுதி விவசாயிகளும் இதில் நடித்துள்ளனர். விவசாய களத்தை பின்புலமாக கொண்ட படமாக, இது எடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

சற்று முன்