- Advertisement -
Homeபொழுதுபோக்கு200 கோடி ரூபாய் வசூல் குவித்த அமரன் திரைப்படம்... அடுத்த திரைப்படத்திற்கு தயாரான எஸ்கே... யாருடன்...

200 கோடி ரூபாய் வசூல் குவித்த அமரன் திரைப்படம்… அடுத்த திரைப்படத்திற்கு தயாரான எஸ்கே… யாருடன் இணையப் போகிறார் என்பது குறித்து ஓபன் டாக்…

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் திருவிழா கோலம் பூண்டுள்ளது. குடும்பம் குடும்பமாக அந்த திரைப்படத்திற்கு பலரும் சென்று வருகிறார்கள். படத்திற்கு விமர்சனங்கள் நன்றாக இருப்பதால், பத்து நாட்களாக பிசியாக ஓடிக்கொண்டிருக்கிறது அமரன்.

 

- Advertisement -

இந்த திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அடுத்த பாய்ச்சலையும் சிவகார்த்திகேயன் செலுத்தி இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இதுதான் சிவகார்த்திகேயனுக்கு முதல்முறையாக 100 கோடி ரூபாய் வசூல் குவித்த திரைப்படமாக அமைந்தது.

 

- Advertisement -

பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது. அது மிகப்பெரிய கிரின்ச் என ரசிகர்கள் இப்போது கூறி வந்தாலும், அப்போது அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பே இருந்து வந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் நன்றாக இருப்பதாக அப்போது பலரும் கூறினார்கள்.

 

இந்த இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு, பிரின்ஸ் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு படுதோல்வியை கொடுக்க, அடுத்து வெளியான மாவீரன் படம் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. காமெடியை ஒதுக்கி, வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சிவகார்த்திகேயனுக்கு அந்த திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூல் ஈட்டி தந்தது.

 

கிட்டத்தட்ட ஐந்து, ஆறு வருடங்களுக்குப் பிறகு வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் அந்த அளவு ஓடவில்லை. இப்படியான சூழலில்தான் அமரன் திரைப்படம் அதை அனைத்தையும் சரிகட்டி இருக்கிறது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார்.

 

வெறும் பத்து நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை இந்த திரைப்படம் குவித்துள்ளது. இதனை கமல்ஹாசனின், ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் டான் திரைப்படத்தை தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் இணைய இருப்பதாக தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஏ ஆர் முருகதாசுடன் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டப் பணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்