- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு தயாரிப்பாளர்களை ஏமாற்றினாரா நடிகர் தனுஷ், உண்மையில் நடந்தது என்ன? - பிரபலம்...

அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு தயாரிப்பாளர்களை ஏமாற்றினாரா நடிகர் தனுஷ், உண்மையில் நடந்தது என்ன? – பிரபலம் சொன்ன தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான நடிகர் தனுஷ், கடந்த வாரத்தில் வெளியான ராயன் படம் வரை 50 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். ராயன் படம், 100 கோடி ரூபாய் வசூலை கடந்து, மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தை நடிகர் தனுஷ் எழுதி இயக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை கஸ்தூரி ராஜா இயக்குனர். அண்ணன் செல்வராகவன் இயக்குனர். அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர். அந்த வரிசையில், நடிகர் தனுஷூம் இயக்குனர். அதுவும் ப பாண்டி படத்தை ஏற்கனவே இயக்கிய தனுஷ், இரண்டாவது முறையாக ராயன் படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் நடிகர் தனுஷ் இயக்கி உள்ளார். இதில் தனுஷின் அக்கா மகன்தான் கதாநாயகனாக நடித்துள்ளார். காதல், காமெடி கலந்து இந்த படத்தை இயக்கி உள்ளார் தனுஷ். அதன்பிறகு தனுஷ் நடித்துவரும் குபேரா திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

சமீபமாக, தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தனுஷூக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு நடிகர் தனுஷ், சொன்னபடி படங்களில் நடிக்க கால்ஷீட் தராமல் ஏமாற்றி வருகிறார் என்பது போன்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அவருக்கு ரெட்கார்ட போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் உண்மையான நிலவரம், அதன் பின்னணி என்ன என்பது குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியிருப்பதாவது, இந்த விஷயத்தில், தனுஷ் நிறைய தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றி விட்டதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அது உண்மையல்ல. அவர் இரண்டு தயாரிப்பாளர்களிடம் மட்டுமே அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்.

இதில் தயாரிப்பாளர் கதிரேசனிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு, கால்ஷீட் தேதி தராமல் இருப்பது உண்மைதான். மற்றொரு தயாரிப்பாளர் ராமநாராயணனின் மகன் முரளியிடம் பணம் வாங்கியிருக்கிறார். இதில் நடந்ததே வேறு. பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இவர்தான் படத்தை தயாரித்திருக்கிறார். அவரிடம் இருந்து ரூ. 5 கோடி வந்த பிறகு படத்தை ஸ்டார்ட் செய்தார். நாகா்ஜூனா அதில் நடித்தார். 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்தது. ஆனால் அடுத்த பேமென்ட் வரவில்லை. சம்பளமும் வரவில்லை. எனவேதான் அந்த படத்தை ஸ்டாப் செய்தார். இப்படி நடந்த நிலையில், அதை எல்லாம் மறைத்துவிட்டு தனுஷ் ஏமாற்றி விட்டது போல நடந்துக்கொள்வது தவறான விஷயம், என்று பிஸ்மி கூறியிருக்கிறார்.

சற்று முன்