நடிகர் விஜய் படம் என்றாலே, அவரது படத்தில் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும். ஏனெனில் விஜய் நல்ல பாடகர் மட்டுமின்றி, நன்றாக நடனமும் ஆடக் கூடியவர். அவரது பிளாப் படங்களில் கூட அவரது டான்ஸ் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகும். சூர்யா போன்ற பிற நடிகர்களுக்கும் விஜய் ஆரம்பத்தில் பாடி இருக்கிறார்.
விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் ஒரு பாடகி. பல இசை நிகழ்ச்சிகளில் பாடியவர். விஜயுடனும் சில பாடல்கள், அவர் நடித்த ஆரம்ப கால படங்களில் ஷோபா பாடியிருக்கிறார். அதுமட்டுமின்றி விஜயின் தாய்மாமா எஸ்என் சுரேந்தர் கடந்த 1980, 90களில் மிகச்சிறந்த பாடகர்களில் ஒருவராக இருந்தவர்.
இப்படி இசை பாரம்பரியத்தை கொண்டுள்ள விஜய்க்கு, இசையில் ஆர்வமும், பாடுவதில் நல்ல ஆற்றலும் உள்ளதால், பல படங்களில் அவர் தனது சொந்த் குரலில் பாடியிருக்கிறார். ஆனால் தி கோட் படத்தில் அவர் பாடிய விசில் போடு பாடலும் எடுபடவில்லை. அதன்பிறகு வெளியான சின்ன சின்ன கண்ணிலே, நீ கண்ணால பார்த்த ஒரு ஸ்பார்க்கு பாடலும் ரசிகர்களை கவரவில்லை.
தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை பொருத்த வரை, ரசிகர்கள் மத்தியில் இசையில் யுவன் சங்கர் ராஜா பலத்த ஏமாற்றம் தந்துவிட்டதாக ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. ஏனெனில் இதுவரை வெளியான 3 பாடல்களுமே விஜய் பட பாடல்கள் போலவே இல்லை. அவரது பாடல்களுக்கான வைப் சிறிதும் அந்த பாடல் வரிகளில், இசையில் இல்லை என்று புலம்புகின்றனர்.
ஆனால் யுவன்சங்கர் ராஜா, ஒவ்வொரு முறையும் பாடலுக்கான 3 டியூன்களை தயார் செய்து விஜய்க்கு அனுப்புவார். அதில் ஒரு டியூன் சிறப்பாக இருப்பதாக சொல்லி, அதை விஜய் ஓகே செய்வார். அதனால் இந்த பாடல்கள் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், அதற்கு காரணம் நான் அல்ல, அந்த டியூனை தேர்வு செய்த நடிகர் விஜய்தான் என்று யுவன் சங்கர் ராஜா விமர்சனத்தில் இருந்து நழுவி விடுகிறார்.
யுவன் சங்கர் ராஜா விஜய்க்கு தயார் செய்து அனுப்புகிற 3 டியூன்களுமே மொக்கையாக இருந்தால், அதில் ஒன்றை தான் விஜய் தேர்வு செய்து தர முடியும். அதனால் பாடல்கள் மொக்கையாக போவதற்கு முதலில் டியூன் போடும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் காரணம். ஒரு பாடல், இசை நன்றாக ரசிக்கும்படி இருக்குமா, இருக்காதா என அதை உருவாக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கு தெரியாதா, விஜய் மீது பழிசுமத்தவே இந்த டெக்னிக்கை செய்கிறார் என்று ரசிகர்கள் காண்டாகி வருகின்றனர்.





