- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் கட்சிக் கொடியில் நடுவில் இருந்து வாகைப்பூ இல்லையாம், உண்மையில் அது என்ன தெரியுமா?...

நடிகர் விஜய் கட்சிக் கொடியில் நடுவில் இருந்து வாகைப்பூ இல்லையாம், உண்மையில் அது என்ன தெரியுமா? – என்னய்யா இப்படி சொல்லிட்டீங்க?

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பயணத்தை அறிவித்தார். இன்று அவர் பனையூரில் உள்ள தனது கட்சி தலைமை நிலைய செயலகத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி கொடியேற்றினார். கட்சி நிர்வாகிகள் மத்தியில் உறுதிமொழி வாசித்தார்.

அதன்பிறகு தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற கட்சியின் பாடலை வெளியிட்டார். அதன்பிறகு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், விரைவில் மாநில மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும், கட்சிக் கொடி குறித்த வரலாற்று குறிப்பு குறித்தும் அப்போது கூறுகிறேன் என்றும் பேசினார்.

ஆனால் இப்போது அவரது கட்சிக் கொடியில் இரண்டு யானைகள் உருவம் பொறி்ககப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானையை அஸ்ஸாம், சிக்கிம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், கட்சி சின்னத்திலோ, கொடியிலோ பயன்படுத்த கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் விதிமுறை உள்ளது.

ஆனால் இதுபற்றிய உண்மை அறியாமல், விஜய் இன்று அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் இரண்டு யானைகள் உருவம் பொறிக்கப்பட்டிருப்பது விதிமீறல். அந்த யானை உருவங்களை கட்சிக் கொடியில் இருந்து நீக்க வேண்டும். இல்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் பி ஆனந்தன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்சிக்கொடி அறிமுகப்படுத்திய நாளிலேயே இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டது தவெக கட்சியினர் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இப்போது கட்சிக் கொடியின் நடுவில் இருப்பது, போர்க்களத்தில் மன்னர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு சூடப்படும் வாகை மலர் என்று கூறப்பட்ட நிலையில், கட்சி கொடியில் இருப்பது அது வாகை மலர் இல்லை என்ற தகவல் பரவி வருகிறது.

தூங்குமூஞ்சி மரம் அல்லது பண்ணிவாகை என அழைக்கப்படும் இந்த மரம் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதுதான் பிங்க் நிற மலர்களை கொடுக்கும். விஜயின் கட்சிக் கொடியில் அதுதான் இடம்பெற்றுள்ளது. ஆனால் உண்மையில் சங்க இலக்கியத்தில் கூறப்படும் வாகை மரம் என்பது பச்சை மற்றும் வெள்ளை நிற மலர்களை மட்டுமே கொடுக்கும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்