- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்திடம் ரூ.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் - அங்கேயும்...

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்திடம் ரூ.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் – அங்கேயும் ஒரு இளையராஜா இருக்கிறாரோ?

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 8 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு வரை நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடந்தாண்டு முதல் நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழை போல இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் கமல் விஜய் சேதுபதியை போல மற்ற மொழிகளிலும் பிரபல நட்சத்திர நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். மலையாளத்தில் நடிகர் மோகன்லால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

- Advertisement -

இந்தியில் பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சி துவங்கி இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த 19வது சீசனில் கடந்த 3ம் தேதி நடந்த 11வது எபிசோடில் புகழ்பெற்ற அக்னிபாத் மற்றும் கோரி தேரே பியார் மெயின் ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த பாடல்களை பயன்படுத்தும் உரிமையை தங்களை கேட்காமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய பிபிஎல் நிறுவனம், இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்கும் எண்டமோல் நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது இந்தி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து பிபிஎல் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, இந்த பாடல்களின் உரிமையை தாங்கள் சோனி மியூசிக் நிறுவனத்திற்கு வழங்கி இருப்பதாகவும் அதேசமயம் பொதுவெளியில் இந்த பாடலை பயன்படுத்தும் உரிமை தங்களது பிபிஎல் இந்தியா நிறுவனத்திற்கு மட்டுமே இருக்கிறது.

காப்பிரைட் சட்ட விதிகளை மீறி அனுமதியின்றி இந்த பாடல்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழ் சினிமாவில்தான் பாடல்கள் காப்பிரைட் விவகாரத்தில் இளையராஜா பிரச்சனை செய்து வருகிறார் என்றால் இந்தியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்களுக்கு பிபிஎல் நிறுவனம் 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருப்பது இந்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்