- Advertisement -
Homeபொழுதுபோக்குஆமாப்பே... ஆயிரம் கோடிப்பே... எங்களின் இலக்கு ஆயிரம் கோடி ரூபாய் வசூல்தான்... அடித்து கூறும் கங்குவா...

ஆமாப்பே… ஆயிரம் கோடிப்பே… எங்களின் இலக்கு ஆயிரம் கோடி ரூபாய் வசூல்தான்… அடித்து கூறும் கங்குவா தயாரிப்பாளர்…

- Advertisement -

சூரரைப் போற்று, ஜெய் பீம் திரைப்படங்களைத் தொடர்ந்து சூர்யா நடித்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளைகளை அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கினார். பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய் ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலை குவிக்க தவறியது.

இதைத்தொடர்ந்து தனது ஆசான் இயக்குனர் பாலா உடன் இணைந்தார் சூர்யா. அவரின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்க, கன்னியாகுமரியில் படப்பிடிப்பும் தொடங்கியது. வணங்கான் என தலைப்பிடப்பட்டு அதற்கான முதல் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். ஆனால், சூட்டிங்கின் போது இயக்குனர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிந்தனர்.

- Advertisement -

வணங்கான் திரைப்படத்திலிருந்து விலகுவதாக சூர்யாவும் அறிவித்தார். இதையடுத்து, நடிகர் அருண் விஜயுடன் இணைந்து இயக்குனர் பாலா மடங்கான் படத்தை எடுத்து வருகிறார். இந்த பக்கம் நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா உடன் இணைந்து கங்குவா படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.

சூர்யாவின் திரை உலக பயணத்திலேயே மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாகிறது. திஷா பாண்டே, யோகி பாபு, நட்டி, கோவை சரளா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். முந்தைய பிறவி என்னும் கான்செப்ட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், கொடைக்கானலில் அடர்ந்த வனப்பகுதியில் இதன் சூட்டிங் நடத்தப்பட்டது.

- Advertisement -

சமீபத்தில் படம் பற்றி பேசிய இயக்குனர் சித்தி சிவா, கங்குவா திரைக்கதையை எழுதி முடிக்க நான்கு ஆண்டுகள் ஆனதாக கூறினார். கங்குவா என்றால் தமிழ் பெயர்தான் என்றும், நெருப்புக்கு இன்னொரு பெயர் கங்கு என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக சூர்யா பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி கங்குவார் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியானது.

முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளுடன் படம் உருவாக்கப்பட்டு இருப்பதை கிளிம்ப்ஸ் எடுத்துரைத்தது. அதன் இறுதியில் சூர்யா பேசும் நலமா என்ற டயலாக்கும் ரசிகர்கள் மத்தியில் நன்கு ரீச் ஆனது. இந்நிலையில் கங்குவா குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றால், இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை எடுப்போம் என்று கூறினார். கிளிம்ப்ஸ் வீடியோவை பார்த்துவிட்டு, இந்தி பட விநியோகஸ்தர்கள் 400 கோடி ரூபாய் அளவுக்கு பாலிவுட்டிலேயே வர்த்தகமாகும் என்று கூறுகிறார்கள். நாங்கள் ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்துள்ளோம். படத்தின் பட்ஜெட் தற்போதைக்கு 250 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்