- Advertisement -
Homeபொழுதுபோக்குநாடாளுமன்ற தேர்தலில் விஜய் ஓட்டுப் போடுவாரா, மாட்டாரா? - அரசியல் தலைவரான பிறகு இப்படி சர்ச்சையா...

நாடாளுமன்ற தேர்தலில் விஜய் ஓட்டுப் போடுவாரா, மாட்டாரா? – அரசியல் தலைவரான பிறகு இப்படி சர்ச்சையா – என்ன பாஸ் நடக்குது இங்கே

- Advertisement -

கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடிகர் விஜய், தனது அரசியல் வருகையை அறிவித்தார். வரும் 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தெளிவுபட அறிவித்தார். தொடர்ந்து அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகளை செய்து வருகிறார்.

இப்போது விஜய், த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தில் விஜய் இரட்டை ரோலில் அப்பா – மகனாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, புதுச்சேரி, துருக்கி, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிலையில் இப்போது கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.

- Advertisement -

கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 6 மாதங்களாக நடந்து வருகிறது. இந்த மாதத்துடன் படப்பிடிப்பு முடிந்துவிடும் என துவக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் மற்றொரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதனால் புது சர்ச்சையும் கிளம்பி இருக்கிறது.

அதாவது ஏற்கனவே திட்டமிடப்படி விஜய் படத்தின் ஷூட்டிங், ரஷ்யாவில் நடப்பதாக இருந்தது. ஆனால் திருவனந்தபுரத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் ரஷ்யா ஷூட்டிங் கேன்சலாகி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இல்லை ரஷ்யாவிலும் ஷூட்டிங் நடப்பது உறுதியாகி விட்டது. இதற்காக படக்குழு வரும் ஏப்ரல் மாதம் ரஷ்யாவுக்கு செல்ல உள்ளது.

- Advertisement -

அதாவது ரஷ்யாவில் நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகளவில் எடுக்கப்பட இருக்கிறது. அதற்காக தொடர்ந்து 16 நாட்கள் அங்கு ஷூட்டிங் நடத்தப்பட உள்ளது. இந்த சூழலில் வரும் ஏப்ரல் 19ம் தேதி, நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஆனால் ரஷ்யாவுக்கு விஜய் சென்றுவிட்டால் இங்கு ஓட்டுப்பதிவில் பங்கேற்க முடியாது சூழல் ஏற்படும்.

அதனால் ரஷ்யாவில் நடக்கும் விஜய் படத்தின் ஷூட்டிங்கை ஏப்ரல் 18ம் தேதிக்குள் முடித்துவிட்டு, தமிழகம் திரும்ப வேண்டும். அல்லது ஏப்ரல் 19ம் தேதிக்கு பிறகு, விஜய் ரஷ்யா புறப்பட்டுச் செல்ல வேண்டும். அல்லது விஜய் ரஷ்யாவில் படப்பிடிப்பில் இருந்தால், நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்காக மட்டுமே, அவர் சென்னைக்கு வந்து செல்ல வேண்டும். அதனால் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வருகிற தேர்தலில் ஓட்டுப் போடுவாரா, மாட்டாரா என்ற சந்தேகத்தை, சர்ச்சையை கிளப்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்