தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவிமோகன். பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர். ஜெயம் ரவி என்ற தனது பெயரை கடந்தாண்டில் ரவிமோகன் என மாற்றிக்கொண்டார். மேலும் ரவிமோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.
கடந்த 2015ம் ஆண்டில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்தாண்டில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவிமோகன் அறிவித்தார். மேலும் இவர்களது விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இதையடுத்து நடிகர் ரவிமோகன், பாடகி கெனிஷா என்பவருடன் நெருக்கமான நட்பை வெளிப்படுத்தினார். சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவில் ரவிமோகன் கெனிஷா இருவரும் ஒரே நிற ஆடையில் ஜோடியாக வந்து கலந்துக்கொண்டது இணையத்தில் வைரலானது.
இந்த சூழலில் நடிகர் ரவிமோகன் தொடர்ந்து மனைவி பிள்ளைகள் தனது பெற்றோர் உறவினர்கள் என யாருடனும் நெருக்கம் காட்டாமல் பாடகி கெனிஷாவுடன் மட்டுமே நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட ரவிமோகன் கெனிஷாவுடன்தான் வருகிறார்.
சமீபத்தில் நடிகர் ரவிமோகன் மற்றும் கெனிஷா இருவரும் இணைந்து கோவாவில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள ஒரு சொத்தை வாங்கியுள்ளனர். அப்போது அதற்கான பத்திர பதிவில் நடிகர் ரவிமோகன், தன்னை திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகளுக்கு தந்தையாக வாழ்ந்த நடிகர் ரவிமோகன் இப்படி ஒரு பொய்யை சொல்லியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லது இது பத்திர பதிவு நடந்த போது தெரியாமல் ஏற்பட்ட தவறாக இருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் ரவிமோகனுக்கு முட்டு கொடுத்து வருகின்றனர். இது இணையத்தில் சர்ச்சையாக வெடித்துள்ளது.





