தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன காமெடி ரோல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் ஒருமுறை விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. பொதுவாக புதிய படங்களின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் கூல் சுரேஷ் கலந்துக்கொண்டு ஏதேனும் வித்யாசமாக செய்வார்.
எதையும் வித்யாசமாக செய்கிறேன் என்ற பெயரில் அவர் செய்யும் கோணங்கித்தனமான விஷயங்கள்தான் சில நேரங்களில் பெரிய அளவில் கடும் விமர்சனத்தை அவருக்கு ஏற்படுத்தி விடுகிறது. சரக்கு பட விழாவில் பெண் தொகுப்பாளருக்கு மாலை போட்டு அவர் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.
அத்துடன் சமீபத்தில் ஆட்டி என்ற படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் சிங்கப்பெண் அதிரடி படை போன்ற சீருடையில் அவர் வந்து கலந்துக்கொண்டார். தமிழக அரசின் போலீஸ் சீருடையை அவர் அணிந்து வந்தது கடும் விமர்சனத்தை சந்தித்தது. இதுகுறித்தும் அவரை ரசிகர்கள் விமர்சித்தனர்.
இப்போது இயக்குனர் பாக்யராஜ் மறைவு நிகழ்விலும் அப்படி ஒரு விமர்சனத்தை கூல் சுரேஷ் சந்தித்துள்ளார். முந்தானை முடிச்சு படத்தில் தன்னை விரும்பாத கணவனை தன் பக்கம் ஈர்க்க நினைக்கும் மனைவி ஊர்வசி, பாக்யராஜூகு்கு முருங்கைகாய் சமைத்து தருவது போல் ஒரு காட்சி வரும். அந்த காட்சியில் அவரும் ஊர்வசியும் நடித்திருந்தனர்.
அப்போது காமெடியாக அது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு மிகவும் பிரபலமானது. ஆனால் அந்த காட்சியை நினைவுபடுத்தும் விதமாக கே பாக்யராஜ் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் கூல் சுரேஷ் கையில் ஒரு கட்டு முருங்கைகாய்களையும் எடுத்து வந்திருந்தார்.
இது அங்கிருந்தவர்களை எரிச்சலடைய வைத்தது. நான் எடுத்து வந்த பொருளை யாரும் விமர்சனம் செய்யாதீங்க என்றும் அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். ஒரு துக்கமான நேரத்தில் இப்படி அதிகபிரசங்கித்தனம் செய்வது சரிதானா என்று நெட்டிசன்கள் பலரும் கூல் சுரேஷை திட்டி வருகின்றனர்.





