- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான கூலி… மக்களின் வரவேற்பு எப்படி உள்ளது? - லோகேஷ்...

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான கூலி… மக்களின் வரவேற்பு எப்படி உள்ளது? – லோகேஷ் கனகராஜூக்கு வாழ்த்துகள் வருதா…?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளியான படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு அனிருத் இசையில் உருவான இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் இருந்தது. அதுவும் நாகர்ஜூனா அமீர்கான் சௌபின் சாஹிர் ஸ்ருதிஹாசன் உபேந்திரா சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

தமிழ் சினிமாவில் இதுவரை எந்த தமிழ் படமும் ரூ. 1000 கோடி வசூலை செய்யவில்லை. அதனால் கூலி படம்தான் அந்த தரமான சம்பவத்தை செய்யப் போகிறது என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் சந்தோஷமாக பேசி வந்தனர். ஆனால் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் இந்தியன் 2 தக்லைஃப் கங்குவா கேம் சேஞ்சர் வரிசையில் முதல் இடம் கூலிக்குதான் என விமர்சிக்க துவங்கி விட்டனர்.

கதையே இல்லாமல் ஒரு கதையை உருவாக்கி மொக்கையான திரைக் கதையில் வெறும் நட்சத்திரங்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கூலி என்கிற காட்டு மொக்கை படத்தை எடுத்து வைத்திருந்ததை கண்டு ரசிகர்கள் விரக்தியின் உச்சத்துக்கே போய்விட்டனர். படம் முழுவதும் எல்லா காட்சிகளிலும் லாஜிக் ஓட்டையாக இருந்தது.

அதுவும் எலக்ட்ரிக் ஷேர் மூலம் சடலங்களை எரிக்கும் சத்யராஜை வில்லன் குரூப் கொன்றுவிட அவர்களை பழிவாங்க வருகிறார் ரஜினிகாந்த். அவரது உண்மையாக மகள்தான் ஸ்ருதிஹாசன், சத்யராஜிடம் வளர்கிறார் என்கின்றனர். அதற்கான காரணம் தெரியவே இல்லை. ரஜினியும் கடைசியில் அதை தன் மகளிடம் கூறுவதே இல்லை.

ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் நிறைந்த இந்த படத்துக்கு சென்சார் போர்டு ஏ சான்று வழங்கியதால், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் ஃபேமிலி ஆடியன்ஸ்சும் இந்த படத்தை தியேட்டர்களில் பார்க்க வரவில்லை. எப்படியோ படம் ரூ. 520 கோடி வரை வசூலித்து விட்டது. இந்த சூழலில் கூலி படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

தியேட்டரில் கூலி படத்தை பார்க்காமல் தவறவிட்டவர்கள் குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ் ஓடிடி தளத்தில் பார்த்து வருகின்றனர். இதில் பலரும் மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர். இதெல்லாம் ஒரு படமா, இப்படி ஒரு கதையா, லோகேஷ் கனகராஜூக்கு தான் படம் எடுக்க தெரியலே, ரஜினி போன்ற அனுபவம் மிக்க மூத்த நடிகர்கள் இதுபோன்ற படங்களில் நடிக்கலாமா? எப்படியப்பா தியேட்டர்ல 3 மணி நேரம் இந்த படத்தை உட்கார்ந்து பார்த்தீங்க, 30 நிமிடம் கூட உட்கார முடியலையே என்று கேள்வி எழுப்பி விமர்சனம் செய்கின்றனர்.

சற்று முன்