- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகி வரும் கூலி படம் - டீசர் வெளியீடு குறித்து...

ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகி வரும் கூலி படம் – டீசர் வெளியீடு குறித்து வெளியான முக்கிய தகவல், போடு வெடிய!

- Advertisement -

கோவையில் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் குறும்படங்களை இயக்கி பாராட்டுகளை பெற்றவர் லோகேஷ் கனகராஜ். குறும்படங்களை இயக்கிய அதே அனுபவத்தை கொண்டு, யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் அவர் நேரடியாக இயக்கிய முதல் படம் மாநகரம், மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து கார்த்தி நடித்த கைதி படமும், கமல் நடித்த விக்ரம் படமும் பெரிய அளவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இமேஜை உயர்த்தியது. விஜய் நாயகனாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்த மாஸ்டர் படமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய வரவேற்பை கொடுத்தது.

- Advertisement -

ஆனால் அதன்பிறகு நடிகர் விஜய் திரிஷா நடித்த லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இந்த படம் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்தது. இரட்டை பிறவி நரபலி ஜோதிடம் போன்ற கதையமைப்பால் படம் பார்த்த ரசிகர்கள் கடும் விரக்தியடைந்தனர். படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் பலத்த ஏமாற்றம் தந்தது.

இதையடுத்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படம் கூலி படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்து வருகிறார். ரஜினிகாந்துடன் உபேந்திரா சத்யராஜ் நாகர்ஜூனா அமீர்கான் ஸ்ருதிஹாசன் அபிராமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் பூஜா ஹெக்டே ஆடுகிறார் என்பதும் கூடுதல் தகவல். இந்த சூழலில் கூலி படத்தின் டீசர் வெளியீடு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 14ம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளில் கூலி படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்றும் அதே நாளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. ரஜினி லோகேஷ் காம்போவில் உருவாகி வரும் கூலி படம் குறித்த எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்து, ரூ. 1000 கோடி வசூல் உறுதி என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் ரூ. 1000 கோடி வசூலை அள்ளப் போவதும், தமிழ் சினிமாவில் முதல் படமாக ரூ. 1000 கோடி வசூலிக்கும் பெருமையை தரப் போவதும் கூலிதான் என்று ரஜினி ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்