- Advertisement -
Homeபொழுதுபோக்குரிலீஸான புதுப்படங்களுக்கு 3 நாட்கள் விமர்சனங்கள் செய்யக் கூடாது;திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர்நீதி...

ரிலீஸான புதுப்படங்களுக்கு 3 நாட்கள் விமர்சனங்கள் செய்யக் கூடாது;திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு – நீதிபதியின் அதிரடி தீர்ப்பு!

- Advertisement -

சமீப காலமாக தமிழ் சினிமாவில் புதிதாக ரிலீசாகும் திரைப்படங்களின் வெற்றியை பெரும்பாலும் விமர்சனங்கள் தான் தீர்மானிக்கின்றன. அதுவும் இணையத்தில் படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்து வருவதால் பல படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கின்றன.

முதல் நாள் முதல் காட்சி என்ற அடிப்படையில் படம் பார்த்த விமர்சகர்கள் படம் குறித்து தாறுமாறாக விமர்சித்து படத்தை குப்பை என்று கூறி விடுகின்றனர். அதனால் விமர்சனங்களை பார்க்கும் பெரும்பாலான மக்கள் தியேட்டர்களுக்கு செல்வதை தவிர்க்கின்றனர். இதனால் அந்த படங்கள் ஓடாமல் தயாரிப்பாளர்கள் பலத்த நஷ்மடைகின்றனர்.

- Advertisement -

மேலும் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு செல்லாததற்கு மற்றொரு முக்கிய காரணம் அதிக டிக்கெட் விலை, கேண்டீன் தின்பண்டங்கள் விலை, போக்குவரத்து செலவு, நேர விரயம் உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொண்டு நல்ல படங்களை மட்டுமே குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்.

அது மட்டும் இன்றி ரஜினி, கமல், விஜய், அஜித் குமார் போன்ற டாப் லெவல் நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே எந்த மாதிரியான விமர்சனம் இருந்தாலும் தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்வதும், மற்ற நடிகர்களின் படங்கள் என்றால் இணையத்தில் வரும் விமர்சனங்களை வைத்து அந்த படத்துக்கு செல்வதா, வேண்டாமா என்பதை தீர்மானிக்கின்றனர். பெரும்பாலும் படம் பார்க்கவே தவிர்க்கின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆண்டில் வெளியான இந்தியன் 2 வேட்டையன் குறிப்பாக சூர்யா நடித்த கங்குவா போன்ற படங்கள் எதிர்மறை விமர்சனங்களால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தன. அதிலும் இந்தியன் 2 படமும், கங்குவா படமும் பயங்கரமான நஷ்டத்தை சந்தித்தது. இப்படி இணையத்தில் யூடியூபர்கள் அந்த படங்களை மோசமாக விமர்சிப்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வடக்கு தொடுக்கப்பட்டது.

புதிய படம் வெளியாகி 3 நாட்களுக்கு விமர்சனங்களை சமூக ஊடகங்களில் வெளியிடக் கூடாது, எதிர்மறை விமர்சனங்கள் படங்கள் தோல்வி அடைவதாகவும் திரைப்படங்கள் வெளியாகி 3 நாட்களுக்கு விமர்சனங்கள் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இப்போது அந்த வழக்கில் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி படங்கள் வெளியான 3 நாட்களுக்குள் விமர்சனம் செய்ய தடை விதிக்க முடியாது. விமர்சிப்பது கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. அவதூறு பரப்பினால் போலீசில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்து தடை விதிக்க கோர்ட் மறுத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்