- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னய்யா இது… வடிவேலு சொல்ற மாதிரி ராம்சரணை வெச்சு காமெடி கீமெடி பண்ணீட்டாங்களா? - வாய்விட்டு...

என்னய்யா இது… வடிவேலு சொல்ற மாதிரி ராம்சரணை வெச்சு காமெடி கீமெடி பண்ணீட்டாங்களா? – வாய்விட்டு சிரித்த ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ்நாட்டில் ஒரு காலகட்டத்தில் கட் அவுட் கலாசாரம் பெரிய அளவில் இருந்தது. குறிப்பாக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எங்கு திரும்பினாலும் ரோடுகளில், தெரு முனைகளில் கட் அவுட்களாக காட்சியளிக்கும். கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் அது தொடர்ந்தது. ஆனால் கட் அவுட்டுகள் சரிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் அந்த கலாசாரம் நாளடைவில் மறைந்தது.

ஆனால் இன்னும் பிளக் பேனர்கள் வைப்பது தமிழ்நாட்டில் ஓய்ந்தபாடில்லை. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு என்பது போல் ஆளுங்கட்சி, எதிர்கட்சி கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர்ந்து கட் அவுட்கள் வைக்கப்படுகின்றன. அரசு தடை இருந்தாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் விஜயவாடாவில் நடிகர் ராம்சரணுக்கு மிகப்பெரிய கட் அவுட் வைக்கப்பட்டது. அதாவது 9 லட்சம் ரூபாய் செலவில் 25 நாட்களுக்கு மேல் பணிசெய்து இந்த 250 அடி உயர கட் அவுட்டை வைத்துள்ளனர். இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் கேம் சேஞ்சர் பட தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர் ராம் சரண் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

250 அடி உயரத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மெகா சைஸ் கட் அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் இருந்து பூக்களை தூவி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்களும் பங்கேற்று உள்ளனர். வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள கேம் சேஞ்சர் படத்தின் பிரமோசனுக்காக இந்த கட் அவுட் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கு முன்பு நடிகர் பிரபாஸூக்கு 230 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்ட நிலையில், அதையும் மிஞ்சும் விதமாக 250 அடி உயரத்தில் இந்த ராம் சரண் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முறைப்படி அரசு அனுமதி பெற்றுதான் வைத்துள்ளனர் என்றாலும், கட் அவுட்டை பார்க்கும் ரசிகர்கள் பார்த்தவுடன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து வருகின்றனர்.

ஏனெனில் கேம் சேஞ்சர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய படம். அதுவும் பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியாகிறது. இந்தி நடிகை கியாரே அத்வானி நாயகியாக நடித்துள்ளார். கோட் சூட் கூலிங்கிளாஸ் என ஸ்மார்ட் லுக்கில் ராம்சரணின் கட் அவுட் வைக்காமல் முழங்கால் வரை தூக்கி கட்டிய கட்டம் போட்ட லுங்கி, கருப்பு முண்டா பனியனுடன் டீக்கடை மாஸ்டர் போல இருக்கும் ராம் சரண் போஸை பார்த்து, என்னய்யா காமெடி பண்ணி வெச்சிருக்கீங்க என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்