- Advertisement -
Homeபொழுதுபோக்குகேமியோ ரோலுக்கு இவ்வளவு கோடி சம்பளமா? நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படத்தில் அவரையே சம்பளத்தில் ஓவர்...

கேமியோ ரோலுக்கு இவ்வளவு கோடி சம்பளமா? நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படத்தில் அவரையே சம்பளத்தில் ஓவர் டேக் செய்த பிரபல நடிகை

- Advertisement -

அட்லீ பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “ஜவான்”. அட்லீ மட்டுமல்லாது இத்திரைப்படத்தின் மூலம் நயன்தாரா, அனிரூத் ஆகியோரும் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்கள். “ஜவான்” திரைப்படத்தில் பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா போன்ற பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இத்திரைப்படத்தில் அட்டகாசமான டீசர் வெளிவந்து பட்டையை கிளப்பியது. பாலிவுட்டில் சமீப காலமாக ஷாருக்கானின் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த “பதான்” திரைப்படம் ஓரளவு நல்ல வசூலை பெற்றது. எனினும் “ஜவான்” திரைப்படம் ஷாருக்கானின் கம்பேக் திரைப்படமாக நிச்சயம் அமையும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

“ஜவான்” திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் தீபிகா படுகோன் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அத்திரைப்படத்தின் கதாநாயகியான நயன்தாராவை விட அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளாராம் தீபிகா.

அதாவது நயன்தாராவிற்கு “ஜவான்” திரைப்படத்தில் 10 கோடி சம்பளமாம். ஆனால் அத்திரைப்படத்தில் கேமியோ ரோலில் வந்த தீபிகா படுகோனிற்கு 20 கோடி சம்பளமாம். இவ்வாறு கதாநாயகி நயன்தாராவை விட கேமியோ ரோலில் சில நிமிடங்களே வந்து போகும் தீபிகா படுகோன் அதிக சம்பளம் வாங்கியுள்ள செய்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்