- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பாடல்கள் பற்றி இளையராஜா ஏ ஆர் ராகுமானுக்கு எதுவுமே தெரியாது - ஓப்பனாக சொன்ன...

அந்த பாடல்கள் பற்றி இளையராஜா ஏ ஆர் ராகுமானுக்கு எதுவுமே தெரியாது – ஓப்பனாக சொன்ன தேனிசை தென்றல் தேவா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் தேவா. தனது இசையால் கானா பாடல்களுக்கு பெருமை சேர்த்தவர். சென்னையில் நடந்த மீசைய முறுக்கு 2 படத்தின் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேனிசை தென்றல் தேவா பேசியதாவது, மக்களை நன்றாக புரிந்து கொண்டுள்ளார் ஆதி. அது அவர் செய்த மிகப்பெரிய பாக்கியம்.

அவர் எந்த பாடல் பாடினாலும் கோடிக்கணக்கில் ரிவ்யூஸ் போகிறது. எங்கள் வீட்டில் ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் என் பேரன் ஹிப் ஹாப் ஆதி ரசிகர். அவர் போட்டோவைத் தான் போனில் வைத்திருக்கிறார். இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்தோம். நான் ஏன் சினிமாவில் கானாவை கொண்டு வந்தேன் என்பதற்கு ஒரு காரணம் உண்டு.

- Advertisement -

நான் சினிமாவுக்கு வந்த போது இசைஞானி இளையராஜா கொடி கட்டி பறந்தார். இப்போதும் அப்படித்தான். அடுத்தது ஏஆர் ரகுமான் வந்தார். அப்போதும் எனது பாடலைப் பற்றி பேசும்போது ஒன்று ராஜா சார் பாடல் போல் இருந்தது எனவும் இல்லை என்றால் ஏ ஆர் ரகுமான் சார் பாடல் போல் உள்ளது என்றும் கூறுவார்கள். பத்திரிக்கையில் என்னை கழுவி ஊற்றுவார்கள்.

அதனால் நான் தனி பாணியை தேர்ந்தெடுக்க விரும்பினேன். கானா பாடலை திரைப்படத்தில் கொண்டு வரலாம் என நினைத்துக் கொண்டு வந்தேன். ஆனால் அது சாதாரண விஷயம் இல்லை. அந்த காலத்தில் அந்த பாடல்களை பிளாட்பார்ம் சாங் என்பார்கள். அது சென்னையில் நாட்டுப்புறப் பாடல். நான் தான் அதை கானா என மாற்றினேன். கானா என்றால் இந்தியில் பாடல் என்று அர்த்தம். வடசென்னை மக்களும் கானா பாடல் கொண்டு வர முக்கியமானவர்களாக இருந்தார்கள்.

- Advertisement -

ராஜா சாருக்கும் ரகுமான் சாருக்கும் கானா பாடல் தெரியாது. அதனால் தான் நான் அதை கொண்டு வந்தேன். மீசையை முறுக்கு 2 படத்தை பார்த்து அனைவரும் திரையரங்குகளில் அழுதார்கள். கானா கலைஞர்களுக்கு பாட்டுத்தான் எல்லாம். ஆரம்பத்தில் உழைக்கும் மக்கள் வலி தெரியாமல் இருக்க இந்த வகை பாடல்களை தான் பாடினார்கள். பின்னர் அது தொழிலானது.

கானா பாடகர்கள் வித்தியாசமான உடலமைப்பில் இருப்பார்கள். ஆனால் குழந்தை மனசு. எந்த டாபிக் கொடுத்தாலும் பாடுவார்கள். நான் மந்தைவெளி மயிலாப்பூரில் வசித்தேன். எனக்கு அந்த காலத்தில் பல கானா பாடல் நண்பர்கள். அதனால் கானா பாடலை சினிமாவில் கொண்டு வந்தேன். ஆனால் அடிக்கடி சொல்லும் ஆண்டனி அல்போன்ஸ் ஆகியோர் கூட கானா பாடகர்கள் தான் என்று தேனிசை தென்றல் தேவா அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்