நடிகர் தனுஷ் ஓம் படத்தை தொடர்ந்து அடுத்து லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனது 56 படத்தில் நடிக்கிறார். டி 56 என்ற இந்த படத்தின் துவக்க விழா பூஜை சில தினங்களுக்கு முன்பு சிவகங்கையில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலில் நடந்தது. படத்தில் நாயகியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து வடிவேலு முதன் முறையாக நடிக்கிறார். இந்த துவக்க விழாவில் வடிவேலுவும் கலந்துக்கொண்டு அதை உறுதிப்படுத்தினார். இதற்கு முன்பு 2007ம் ஆண்டில் தனுஷ் தமன்னா நடிப்பில் வெளியான படிக்காதவன் படத்தில் முதலில் நடித்தவர் வடிவேலுதான்.
அந்த படப்பிடிப்பில் 3 நாட்கள் வடிவேலு பங்கேற்று அசால்ட் ஆறுமுகம் கேரக்டரில் நடித்த போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர் படத்தை விட்டு விலகிவிட்டார். பிறகு அந்த கேரக்டரில் நடிகர் விவேக் நடித்திருந்தார். அந்த படத்தை நடிக்காமல் விட்ட வடிவேலு, 18 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் நடிக்கிறார்.
இந்த படத்தை பொருத்த வரை நடிகர் வடிவேலு கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இதில் அவர் காமெடி கேரக்டரில் நடிக்கவில்லை. மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் நடித்த எம்எல்ஏ கேரக்டர் போல மிக அழுத்தமான ஒரு கேரக்டரில்தான் வடிவேலு நடிக்க உள்ளார்.
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து முதலில் கதை சொன்ன போது இந்த படத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டார். பிறகு பலகட்ட முயற்சிக்கு பிறகுதான் இந்த படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த கேரக்டர் ரோலில் வேறு ஒரு நடிகர் நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனம் சொன்ன போது இயக்குனர் பலமாக மறுத்துள்ளார்.
இந்த கேரக்டரை பொருத்த வரை வடிவேலுவை வைத்தே நான் எழுதி உருவாக்கி இருக்கிறேன். அவரை தவிர வேறு யார் நடித்தாலும் அந்த கேரக்டர் அவ்வளவு வலுவாக இருக்காது என்று பிடிவாதமாக கூறிய நிலையில் தான் இந்த படத்தில் வடிவேலுவை நடிக்க செய்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் வடிவேலு சம்பளம் ரூ. 6 கோடி என்றும் கூறப்படுகிறது.





