- Advertisement -
Homeபொழுதுபோக்குசந்திரமுகி படத்துக்கு முதலில் இசையமைக்க கமிட் ஆனது நான்தான், அந்த காரணத்தால் என்னை நிராகரித்தனர் -...

சந்திரமுகி படத்துக்கு முதலில் இசையமைக்க கமிட் ஆனது நான்தான், அந்த காரணத்தால் என்னை நிராகரித்தனர் – தேனிசை தென்றல் தேவா வேதனை!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படங்களில் ஒன்றுதான் சந்திரமுகி. கடந்த 2005ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான படம் சந்திரமுகி. இந்த படத்தில் நடிகைகள் நயன்தாரா ஜோதிகா முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர் மேலும் பிரபு நாசர் வடிவேலு சோனு சூட் விஜயகுமார் செம்மீன் ஷீலா மாளவிகா ஸ்வர்ணா கேஆர் விஜயா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

சந்திரமுகி படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த 2005ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்த படம் திகில் காட்சிகள் நிறைந்த ஒரு காமெடி குடும்ப படமாக இருந்தது. இந்த படத்தில் நடிகர் வடிவேலு – ரஜினி நடித்த காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் சந்திரமுகி கேரக்டரில் ஜோதிகாவின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இந்த படத்தில் முதலில் இசையமைக்க கமிட் ஆனவர் தேனிசை தேவாதான். ஆனால் பிறகு அவரை நீக்கிவிட்டு இசையமைப்பாளர் வித்யாசாகரை இந்த படத்தில் கமிட் செய்து விட்டனர். அவரது இசையில் சந்திரமுகி படப்பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பு பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா கூறியதாவது, சந்திரமுகி படத்தில் முதலில் நான்தான் இசையமைக்க இருந்தேன். சிவாஜி சார் வீட்டுக்கு ரஜினியை இயக்குனர் பிவாசு அழைத்தார். அப்போது அவர் என்னையும் அழைத்தார். நாங்கள் எல்லோரும் சிவாஜி வீட்டுக்கு சென்றோம். அப்போது கமலா அம்மாவிடம் ரஜினி பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிவிட்டு வந்ததும், தேவா சார் நாம சிவாஜி புரடக்சனில் ஒரு படம் பண்ண போறோம் என்று என்னிடம் ரஜினி சொன்னார்.

- Advertisement -

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிக்க தேவா இசை அமைக்கிறார் என்று எல்லா பத்திரிகைகளிலும் செய்திகளும் விளம்பரங்களும் வந்துவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு என்னை மாற்றிவிட்டு வித்யாசாகரை இசையமைப்பாளராக கமிட் செய்து விட்டார்கள். ஏனென்றால் அவர் ஒரிஜினல் கன்னடா சந்திரமுகி படத்தில் இசையமைத்தவர். அவருக்குதான் அந்த கதை நன்றாக தெரியும் என்பதால் அவரை கமிட் செய்தோம் என்று பிறகு சொன்னார்கள்.

அவரது இசையில் வெளியான சந்திரமுகி பாடல்கள் எல்லாமே மிகவும் அற்புதமாக இருந்தன தேவா கூறியிருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் சுரேஷ்கோபி ஷோபனா நெடுமுடி வேணு நடிப்பில் வெளியான படம் மணிசித்திரதாழ். இந்த படம் கேரளாவில் 300 நாட்களுக்கு மேல் ஓடியது. இயக்குனர் பி வாசு அந்த படத்தின் உரிமையை வாங்கி 2004ம் ஆண்டு கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் ரஜினியை வைத்து தமிழில் சந்திரமுகி படம் உருவானது. தமிழகத்திலும் சந்திரமுகி திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

- Advertisement -

சற்று முன்