- Advertisement -
Homeபொழுதுபோக்குபராசக்தி படப்பிடிப்பை இலங்கையில் நடத்த இதுதான் முக்கிய காரணம், வெளியான புதிய தகவல் - இன்னொரு...

பராசக்தி படப்பிடிப்பை இலங்கையில் நடத்த இதுதான் முக்கிய காரணம், வெளியான புதிய தகவல் – இன்னொரு முக்கிய தகவலும் இருக்குதுங்க!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது பராசக்தி படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இந்த படத்தில் ஸ்ரீ லீலா ரவி மோகன் அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் கடந்த 1960ம் ஆண்டு முதல் 1965ம் ஆண்டு வரை காலகட்டத்தில் நடக்கிற கதைக்களத்தில் உருவாகி வருகிறது.

இந்தியை எதிர்த்து போராடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மொழிப்போர் தியாகி இராசேந்திரன் என்பவரது வாழ்க்கை வரலாறு கதை தான் பராசக்தி படமாக உருவாகி வருகிறது. இதில் தியாகி இராசேந்திரன் கேரக்டரில்தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டில் இதே போல மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு கதையில்தான் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்திருந்தார். அவரது மனைவியாக இந்து ரெபேகா வர்கீஸ் என்ற கேரக்டரில் நடிகை சாய்பல்லவியும் நடித்திருந்தனர். இந்த படம் ரூ. 325 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இப்போது மீண்டும் பயோபிக் கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதால் சென்டிமென்ட் ஆக இந்த படமும் பெரிய வெற்றியை வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் நடிப்பதாக கமிட் ஆகி சில வாரங்கள் நடித்தார். புறநானூறு என டைட்டில் வைக்கப்பட்ட அந்த படம் கைவிடப்பட்டு, அதே கதையில் பராசக்தி என்ற டைட்டில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இலங்கையில் பராசக்தி படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் 1960 – 65 காலகட்டம் என்பதால் நீராவி எஞ்சின் ரயில் போக்குவரத்து இருந்த காலகட்டமாக அது உள்ளது.

இந்தியாவில் நீராவி எஞ்சின் ரயில் போக்குவரத்து இல்லாத நிலையில், இலங்கையில் அதற்காகவே பராசக்தி படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. மேலும் 1960 – 65 காலகட்டம் போலவே அங்குள்ள பகுதிகள் பழமையான நிலையில் பெரிய வளர்ச்சியின்றி காணப்படுவதால் அப்படியே அந்த காட்சிகளை சுதா கொங்கரா படமாக்கி வருகிறார். மேலும் ஒரு முக்கிய தகவலாக, இந்த மாதம் இறுதி வரை இலங்கையில் தொடர்ந்து ஷூட்டிங் நடத்தி முடித்துவிட்டு, ஏப்ரல் முதல் வாரத்தில் படக்குழு சென்னை திரும்ப உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்