- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல இயக்குனருடன் மீண்டும் இணைய போகும் தனுஷ்... இயக்குனரே கூறிய பதிலால் சந்தோஷத்தில் ரசிகர்கள்... இந்த...

பிரபல இயக்குனருடன் மீண்டும் இணைய போகும் தனுஷ்… இயக்குனரே கூறிய பதிலால் சந்தோஷத்தில் ரசிகர்கள்… இந்த முறை இது எந்த கதையாக இருக்கும்…

- Advertisement -

நடிகர் தனுஷிற்கு இந்த ஆண்டிலேயே இரண்டு திரைப்படங்கள் வெளியாகி விட்டன. நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தனுஷிற்கு கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

- Advertisement -

ஆனால் அதனை படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். கதை நன்றாக இருந்தாலும் மிக மெதுவான திரைக்கதையால் அது நீர்த்து போனது. இருப்பினும் கேப்டன் மில்லர் திரைப்படம், குறிப்பிட்ட அளவு வசூல் செய்தது.

 

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் ஏற்படுத்தி இந்த திரைப்படமும், அதனை பூர்த்தி செய்யவில்லை. விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் பேசு பொருளுக்கு ஆளானது. குறிப்பாக இரண்டாம் பாதி நன்றாகவே இல்லை என்று பலரும் கூறினர்.

 

மேலோட்டமாக எடுக்கப்பட்ட இந்த கதை பலருக்கும் திருப்தியை கொடுக்கவில்லை. அதேசமயம் இந்த விமர்சனம் படத்தின் வசூலை துளி அளவு கூட பாதிக்கவில்லை. இதற்குக் காரணம் வந்த புதிதில் இந்த படம் நன்றாக இருப்பதாக சினிமா விமர்சகர்கள் பலரும் கூறினர். இதனை நம்பி திரையரங்குகளுக்கு போன ரசிகர்களுக்கு வெறும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் இந்த திரைப்படம் வசூல் செய்திருக்கிறது.

 

ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது, தனுஷ் குபேரா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கி வரும் இந்த திரைப்படத்தில், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பிச்சைக்காரன் கோடீஸ்வரனாக மாறுவதை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

 

இந்த படத்தைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோ பிக் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து அவர் இயக்கத்தில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் வெளியாக இருக்கிறது. அப்படியான சூழலில் தனுஷ் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் இணைவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தான் என்றாலும், தற்போது அது பற்றி கூறியிருக்கும் மாரி செல்வராஜ், தன்னுடைய பைசன் திரைப்படத்திற்கு பிறகு, தனுசுடன் இணைய போவதாக அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்