- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன் மில்லர் படம் கொடுத்த மோசமான அனுபவம், அதிரடி முடிவெடுத்த நடிகர் தனுஷ், அதுக்கு தயாரிப்பாளர்...

கேப்டன் மில்லர் படம் கொடுத்த மோசமான அனுபவம், அதிரடி முடிவெடுத்த நடிகர் தனுஷ், அதுக்கு தயாரிப்பாளர் மடியில்தான் கை வைக்கணுமா? – என்ன கொடும சார் இது?

- Advertisement -

நடிகர் தனுஷ் இப்போது தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில், பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா இதில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இன்னும் ஒரு மாதத்தில் ஷூட்டிங் நிறைவடைய உள்ளது.

தனுஷ் தனது 50வது படம் ராயன் இயக்கிய நிலையில், அந்த படம் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது. இந்த படம் எதிர்பார்த்த மாதிரி வரவில்லை, படத்தின் சில காட்சிகளை ரிஷூட் செய்ய வேண்டும் என்று படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம், டைரக்டர் தனுஷிடம் தெளிவாக ஏற்கனவே கூறிவிட்டது.

அதனால் கதையின் போக்குக்கு ஏற்ற வகையில் ஷூட் செய்யப்படாத காட்சிகளை மீண்டும் ரிஷூட் செய்ய வேண்டிய நெருக்கடியில் தனுஷ் இருக்கிறார். அத்துடன், அவரது இயக்கத்தில் காதல், காமெடி கலந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதற்கிடையே நடிகர் தனுஷ் ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. கேப்டன் மில்லர் படத்தில் நடித்த போது கிடைத்த சில மோசமான, கசப்பான அனுபவங்களால் அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், இது தயாரிப்பாளர்களுக்குதான் நெருக்கடி தரும் என்றும் கூறப்படுகிறது.

இனிமேல் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க 50 நாட்கள் மட்டுமே கால்ஷீட் தருவார். ஒரு படத்துக்கு அவரது சம்பளம் ரூ. 50 கோடி.அதாவது ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம். அந்த 50 நாட்களுக்குள் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்து விட வேண்டும். இயக்குனர், தயாரிப்பாளர் தரப்பில் ஏற்படும் கால தாமதங்களுக்கு நடிகர் தனுஷ் பொறுப்பேற்க மாட்டார் என்றும் அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மழை, புயல் என பல காரணங்களால் படப்பிடிப்பு சில தினங்கள், தடைபட வாய்ப்புள்ளது. தவிர, பேட்ச் ஒர்க் எனப்படும் விடுபட்ட காட்சிகள், சரியாக வராத சில காட்சிகளை எடுக்கவும் சில நாட்கள் கூடுதலாக தேவைப்படலாம். இப்படி கட் அண்ட் ரைட்டாக 50 நாள் கால்ஷீட், 50 கோடி ரூபாய் சம்பளம் என்ற நிலைக்கு நடிகர் தனுஷ் வந்திருப்பது, தயாரிப்பாளர்களுக்குதான் தலைவலியாக மாறும் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சற்று முன்