- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லி கடைக்காக இந்த ஊருக்கு செல்கிறாரா தனுஷ்... ரிலீஸ் தேதியை முடிவு பண்ணிட்டு அடுத்த கட்ட...

இட்லி கடைக்காக இந்த ஊருக்கு செல்கிறாரா தனுஷ்… ரிலீஸ் தேதியை முடிவு பண்ணிட்டு அடுத்த கட்ட ஷூட்டிங்ற்க்கு நகரும் நாயகன்…

- Advertisement -

தனுஷ் தற்போது இயக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு இந்த ஆசை இருக்க அது பவர் பாண்டி திரைப்படம் மூலம் வெளிவந்தது. சொல்லப்போனால் அந்த திரைப்படம் மிகவும் நன்றாக இருந்தது. முதியோர்களின் காதலை வேறு ஒரு பரிணாமத்தில் காட்டி கைதட்டல் பெற்றார் தனுஷ்.

 

- Advertisement -

தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களை வரிசை கட்டும் போது அதில் நிச்சயமாக பவர் பாண்டிக்கும் இடம் இருக்கும். அப்படி ஒரு படத்தைக் கொடுத்துவிட்டு பிறகு இயக்கத்தில் இருந்து சிறிது காலம் இடைவெளி அவர் விட்டிருந்தார். இப்படியான சூழலில் தான், ஐம்பதாவது படத்தை கொடுப்பதற்காக அவர் மீண்டும் இயக்கத்தை கையில் எடுத்தார்.

 

- Advertisement -

ராயன் என தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த திரைப்படம் இல்லை என்று தான் கூற வேண்டும். எந்த காட்சியும் புதிய காட்சி போல் இல்லாமல் பழைய படங்களின் சீன்களை அவர் உல்ட்டா அடித்திருந்தார். குறிப்பாக இரண்டாம் பாதி காண்போரை சோதிக்க வைத்தது.

 

ஒரு 50 வது திரைப்படத்தை இப்படியா தனுஷ் கொடுப்பார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். படத்திற்கு ஒரே ஒரு ஆறுதல் ஏ ஆர் ரகுமான் இசை மட்டும் தான். அது மிகவும் நன்றாக இருந்ததால் திரையரங்குகளில் ரசிகர்கள் திரண்டனர். இதனால் 150 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது ராயன் திரைப்படம்.

 

இதன் பிறகு இளைஞர்களின் காதலை மையமாக வைத்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்னும் திரைப்படத்தை தனுஷ் இயக்கி இருக்கிறார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பது வேறு யாரும் அல்ல தனுஷின் அக்கா பையன் தான். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் சூழலில் அடுத்ததாக இட்லி கடை என்னும் படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.

 

இதில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். அருண் விஜய் தான் படத்தின் நாயகன் என்று கூறப்படுகிறது. இதன் சூட்டிங் பணிகள் தேனியில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படியான சூழலில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக, தனுஷ் மதுரைக்கு செல்கிறார். அங்கு முக்கியமான காட்சிகள் எடுக்கப்படுகின்றன.

- Advertisement -

சற்று முன்