- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றியை முன்பதிவு செய்யும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட டிரைலர்... திரைப்படத்தை பார்த்துவிட்டு...

வெற்றியை முன்பதிவு செய்யும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட டிரைலர்… திரைப்படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜ் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா…

- Advertisement -

தனுஷ் தற்போது இட்லி கடை திரைப்படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அருண் விஜய் வில்லனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் நித்யா மேனன் உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கிறார்கள். இதில் அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக வருகிறார். அவருக்கு உதவியாளராக தனுஷ் நடிப்பதாக கூறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல ஒரு ஹோட்டலை மையப்படுத்தியும் இந்த கருத்தை நகர்வதாக பேசப்படுகிறது. தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது இதன் இறுதி கட்டப் பணிகளில் இருக்கிறார் தனுஷ். ஏப்ரல் பத்தாம் தேதி திரைப்படம் வெளியாகும் என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார்.

இதனால் அன்றைய தேதியில் இட்லி கடை மற்றும் அஜித் குமாரின் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகின்றன. இதுபோக தனுஷ் நடிப்பில் ரெடியாக இருக்கும் குபேரா திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வரப்போகிறது. நேரடி தெலுங்கு படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, தனுஷ் இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம், வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த திரைப்படம் முதலில் பிப்ரவரி ஆறாம் தேதி தான் வெளியாவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம், விடாமுயற்சி ரிலீஸ் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டதால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது.

தனுஷின் சகோதரி மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுபோக இளம் நட்சத்திரங்கள் பலர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தியே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சரத்குமார் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட அனுபவம் மிக்க நடிகர்களும் இதில் இடம்பெற்று இருக்கிறார்கள். தற்போது வெளியாகி இருக்கும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

படம் பார்த்து விட்டு பேசி இருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ், நீண்ட நாட்களுக்குப் பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை பார்த்தேன். வழக்கமான காதல் கதையை கண்டு ரசித்தேன். தனுஷ் உருவாக்கி உள்ள உலகத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் கண்டு உற்சாகமடைந்தேன். திரையில் காணும் அனைவருக்கும் இந்த உற்சாகத்தை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்