தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். அவருடன் நடிக்க நான் நீ என பலரும் போட்டி போடுகின்றனர். ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் போன்ற உச்ச நடிகர்களுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது பலரது கனவாக ஆசையாக இருந்து வருகிறது.
நடிகர் விஜய் கூட ஆரம்பத்தில் பெரிய நடிகராக இல்லாமல் வளரும் நடிகராக இருந்த போது கேப்டன் விஜயகாந்துடன் செந்தூரப்பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதன்பிறகு வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகரானார்.
இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் பகவதி. இந்த படத்தில் ரீமாசென் நாயகியாக நடித்திருந்தார். கோர்ட்டில் டீக்கடை நடத்தி வருபவராக இதில் விஜய் நடித்திருப்பார். அவரது தம்பியாக நடிகர் ஜெய் நடித்திருப்பார். இதில் வடிவேலு 2 வேடங்களில் நடித்திருந்தார்.
நடிகர் விஜய்க்கு ஆக்சன் களத்தில் பெரிய வெற்றியை தந்த படம்தான் பகவதி. இந்த படத்தில் நடித்த ஜெய்க்கும் இது நல்ல அடையாளத்தை கொடுத்தது. ஆனால் முதலில் இந்த படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிக்க இருந்தது ஜெய் அல்ல. இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறியிருக்கிறார்.
பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிக்க முதலில் நடிகர் தனுஷிடம் அணுகி பேசினேன். ஆனால் அவர் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார். தம்பி ரோல் எனக்கு செட் ஆகாது என்று வெளிப்படையாக கூறிவிட்டார். விஜயகாந்துடன் விஜய் நடித்தது போல இந்த படம் பி மற்றும் சி சென்டர்களில் உங்களுக்கு பெரிய அடையாளத்தை பெற்றுத் தரும் என்றும் நான் சொன்னேன்.
அதெல்லாம் தேவை இல்லை. காதல் கொண்டேன் படம் வந்தாலே அது எனக்கு நடந்து விடும் என்று நடிகர் தனுஷ் கூறிவிட்டார். அதன்பிறகு விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் ஜெய் நடித்தார் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறியிருக்கிறார். விஜயுடன் நடிக்க மறுத்தது மட்டுமின்றி அலட்சியமாக தனுஷ் பேசிய தகவல் தளபதி ரசிகர்களை எரிச்சலடைய வைத்திருக்கிறது.





