- Advertisement -
Homeபொழுதுபோக்குஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கும் தனுஷ் -...

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கும் தனுஷ் – டைரக்டர் யாருன்னு கேட்டா வேற லெவலா இருக்குதே?

- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான அவரது 50வது படம் ராயன். கடந்தாண்டு ரூ. 100 கோடி வசூலித்த பிளாக்பஸ்டர் தமிழில் படங்களில் ராயன் படமும் ஒன்று. ஆனால் இந்த ஆண்டில் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.

இப்போது நடிகர் தனுஷ் இயக்கி நடித்த படம் இட்லிகடை வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதே நாளில் நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படமும் வெளியாக உள்ளது. 1000க்கும் மேற்பட்ட திரைகளில் இந்த படம் ரிலீஸாக உள்ளதால் இட்லி கடை அன்று ரிலீஸாகுமா என்பதில் குழப்பமும் சந்தேகமும் நீடிக்கிறது.

- Advertisement -

மேலும் இந்தி படம் ஒன்றில் நடித்து வரும் நடிகர் தனுஷ், டெல்லியில் நடந்து வரும் படப்பிடிப்பில் இப்போது இருந்து வருகிறார். மேலும் இளையராஜா பயோபிக் 2 பாகங்களாக உருவாகும் நிலையில் அந்த படத்தை கேப்டன்மில்லர் டைரக்டர் அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்கிறார். அடுத்த ஆண்டில் இந்த படப்பிடிப்பு துவங்க அதிக வாய்ப்புள்ளது.

ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது அவரது இயக்கத்தில் டிராகன் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்தார். 25 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை கடந்து டிராகன் படம் சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் டைரக்டர் அஸ்வத் மாரிமுத்துவிடம் நடிகர் தனுஷ் பேசியிருக்கிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவும் அவர் விருப்பம் தெரிவித்த நிலையில், இருவரும் அதுபற்றி சமீபத்தில் ஆலோசித்துள்ளனர். அப்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம், நடிகர் சிம்பு நடிக்கும் படம் ஆகியவற்றை முடித்து விட்டு தனுஷ் படத்தை இயக்க அஸ்வத் மாரிமுத்து சம்மதம் தெரிவித்துள்ளார்.

சிம்பு படத்துக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்க தாமதமாகும் பட்சத்தில் தனுஷ் படத்தை இயக்கி விட்டு பிரதீப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவும் முடிவாகி உள்ளது. அப்போது பேசிய தனுஷ் ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் சன் பிக்சர்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் நாம் இருவரும் இணையும் படத்தை தயாரிக்காத பட்சத்தில், தெலுங்கில் அல்லு அர்ஜூனின் தயாரிப்பு நிறுவனத்துக்கு நான் கால்ஷீட் தந்துள்ளேன். அந்த நிறுவனமே நாம் இணையும் புதி படத்தை தயாரிக்கும் என்றும் உறுதி தந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்