- Advertisement -
Homeபொழுதுபோக்குராயன் படத்தில் செல்வராகவன் மட்டுமல்ல, தனுஷின் மற்றொரு நெருங்கிய உறவினரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளாரா? -...

ராயன் படத்தில் செல்வராகவன் மட்டுமல்ல, தனுஷின் மற்றொரு நெருங்கிய உறவினரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளாரா? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என அசத்திக்கொண்டு இருக்கும் தனுஷ் இப்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதில் முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸாகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் நடிக்கிறார். கேப்டன் மில்லர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இந்த படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க தனுஷ் ரூ. 100 கோடி சம்பளம் பெறுகிறார்.

- Advertisement -

இது மட்டுமின்றி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ள தனுஷ், அடுத்ததாகவும் ஒரு படத்தை டைரக்ட் செய்ய திட்டமிட்டுள்ளார். ஏனெனில் ராயன் படம் தந்த அபாரமான வெற்றியால் டைரக்சனில் அதிக ஆர்வம் காட்ட துவங்கியிருக்கிறார். எனவே அடுத்தப் படம் இயக்கம் குறித்த அறிவிப்பை தனுஷ் விரைவில் வெளியிட உள்ளார்.

நடிகர் தனுஷ் எழுதிய இயக்கிய படம் ராயன். இந்த படம் செல்வராகவன் படம் போல தனுஷ் இயக்கி இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் ஸ்டைலில் எடுத்திருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். படம் முழுக்க வன்முறை என்றாலும், படம் ரசிக்கும்படி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த படத்தில் தனுஷ், தனது அண்ணன் மற்றும் குருவாக மதிக்கும் இயக்குனர் செல்வராகவனை சேகர் என்ற கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார். தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்ட நலம் விரும்பியாக செல்வராகவனுக்கு கேரக்டர் தந்து, அவரை பெருமைப்படுத்தி இருக்கிறார். கிடைத்த கேரக்டரை சிறப்பாக செய்து அசத்தியிருக்கிறார் செல்வராகவன்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் தனுஷின் மற்றொரு நெருங்கிய உறவினரும் நடித்திருக்கிறார். நடிகர் தனுஷின் சகோதரி கார்த்திகாவின் கணவர் கார்த்திக் என்பவரை நடிக்க வைத்திருக்கிறார். போலீஸ் அதிகாரி பிரகாஷ் ராஜூடன் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருக்கும் அவரது நடிப்பும் படத்தில் மிக முக்கியமானதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்