வாரிசு அரசியலை போல சினிமாவிலும் வாரிசுகள் பலர் நடிக்க வந்து விடுகின்றனர். இது தமிழ் சினிமாவில் புதிது அல்ல. தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பல மொழிகளிலும் வாரிசு நடிகர்கள் நடிகைகள் பலர் நடிக்க வந்துள்ளனர். அதில் சிலர் பெரிய நட்சத்திர கலைஞர்களாகவும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
அந்த வரிசையில் நடிகர் தனுஷின் மகன் யாத்ரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த பேரன். தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியின் முதல் மகனான யாத்ரா விரைவில் சினிமாவில் அறிமுகமாகிறார் என்றும் அந்த படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் டைரக்ட் செய்கிறார் என்றும் அந்த படத்தில் சிக்ஸ்பேக் உடல் தோற்றத்தில் யாத்ரா வருகிறார் என்றும் ஒரு தகவல் பரவியது.
ரஜினி தனுஷ் இருவரது முகத்தோற்றத்தையும் ஒரு சாயலாக கொண்ட யாத்ரா நிச்சயமாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே அவர்களது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக ஆசையாக உள்ளது. ஆனால் உண்மையில் யாத்ரா இப்போது நடிக்க வரவே இல்லை என்கிற உண்மை தகவல் வெளியாகி உள்ளது.
யாத்ராவுக்கு இப்போதுதான் 19 வயதாகிறது. இன்னும் அவர் கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும். எப்படியும் இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் அவர் நடிக்க விருப்பப்பட்டால் சினிமாவுக்குள் வருவார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் இப்போதைக்கு படிப்பில் மட்டுமே அவரது முழு கவனமும் இருந்து வருகிறது.
தாத்தா ரஜினி சூப்பர் ஸ்டார். அம்மா ஐஸ்வர்யா சினிமா இயக்குனர் அப்பா தனுஷூம் பிரபல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர். மேலும் தாத்தா கஸ்தூரி குமார் பெரியப்பா செல்வராகவனும் பெரிய இயக்குனர்கள்தான். அப்படி யாத்ரா நடிக்க விரும்பினால் இவர்களில் யார் வேணுமானாலும் இயக்குனராகி யாத்ராவை சினிமாவில் அறிமுகம் செய்து விடுவார்கள்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், படிக்கிற வயதில் படிப்பில்தான் முழு கவனமும் இருக்க வேண்டும். படிக்க வேண்டிய வயதில் படிப்பை தவறவிட்டால் வாழ்க்கையில் பெரிய இழப்பை சந்திக்க வேண்டும். படிப்பை மட்டும் தவற விடக்கூடாது என்று கூறியிருந்தார். அது யாத்ராவுக்கும் பொருத்தமான ஒரு அட்வைஸ் ஆக தான் அவர் கூறியிருக்கிறார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





