- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது ராயன் திரைப்படத்தில் அந்த கேரக்டரில் நடித்தவர் தனுஷின் மச்சானா... போஸ்டர் போட்டு நன்றி தெரிவித்த...

என்னது ராயன் திரைப்படத்தில் அந்த கேரக்டரில் நடித்தவர் தனுஷின் மச்சானா… போஸ்டர் போட்டு நன்றி தெரிவித்த நடிகரின் சகோதரி… இது புது விஷயமா இருக்கேப்பா…

- Advertisement -

நடிகர் தனுஷிற்கு இந்த ஆண்டு மட்டும் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெறவில்லை.

 

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தன. அதுவும் நடிகரே இயக்கி நடித்திருப்பதால் அதன் அறிவிப்பின்போதே பலரும் எதிர்பார்க்கத் தொடங்கினர். இந்த நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

 

- Advertisement -

தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, சரவணன், அபர்ணா பால முரளி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு விமர்சனத்தை அந்த திரைப்படம் பெறவில்லை.

 

குறிப்பாக முதல் பாதி நன்றாக இருந்தது என்றும், ஆனால் இரண்டாம் பாதி மிகவும் சுமாராக இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இது ஏதும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு திரையரங்குகளில் ரசிகர்கள் குவிய ஆரம்பித்ததால், ராயன் திரைப்படம் கல்லா கட்டியது.

 

மிக முக்கியமாக ஏ ஆர் ரகுமான் இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்ததால், திரையரங்குகள் நோக்கி ரசிகர்கள் படையெடுக்க, தனுசுக்கு 100 கோடி ரூபாய் வசூல் கொடுத்த இரண்டாவது திரைப்படம் ஆக ராயன் உருவெடுத்தது. தற்போது வரை கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் அந்த திரைப்படம் வசூல் செய்திருக்கிறது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ள தனுஷ், அண்மையில் சினிமா பத்திரிகையாளர்களுக்கு விருந்து அளித்தார்.

 

இந்த நிலையில் ராயல் திரைப்படத்தில் தனுஷின் அக்காவாக கார்த்திகா தேவியின் கணவர் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவராக இருக்கும் கார்த்திக் ஆஞ்சநேயன் இந்த திரைப்படத்தில், பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடித்திருந்தார். இதனை குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார் தனுஷின் சகோதரி ஆன மருத்துவர் கார்த்திகா தேவி. தனது கணவரை பெரிய திரையில் காண்பேன் என்றுதான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவரது இந்த போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்