- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் வீட்டுக்குள் தனது மனைவி குறித்து பேசிய தினேஷ், அமைதியாக இருப்பது நல்லது என எச்சரித்து...

பிக்பாஸ் வீட்டுக்குள் தனது மனைவி குறித்து பேசிய தினேஷ், அமைதியாக இருப்பது நல்லது என எச்சரித்து பதிவிட்ட ரக்சிதா – அப்படி என்னதான் பிரச்னை பாஸ்?

- Advertisement -

சின்னத்திரை நடிகர் தினேஷ், சின்னத்திரை நடிகை ரக்சிதா மகாலட்சுமி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். கருத்து வேறுபாடு என கூறினாலும், இருவருக்குள் என்ன பிரச்னை என்பது இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தினேஷின் பெற்றோர், எங்கள் மருமகள் ரக்சிதாவை, நாங்கள் மகள் போலவே நடத்தினோம். ரக்சிதா வீட்டில் அனைவருமே நல்ல மனிதர்கள். ரக்சிதா மட்டுமல்ல, அவரது குடும்பம் சார்ந்த யாரையுமே எந்த குறையும், தவறும் சொல்ல முடியாது. அந்தளவுக்கு மிக நல்ல மனிதர்கள்.

- Advertisement -

ரக்சிதா, என்னிடம் அன்பாக, பாசமாக நடந்துக்கொள்வதை பார்த்து சிலர், தினேஷிடம் அவர்தான் ரக்சிதாவின் அம்மாவா என கேட்டுள்ளனர். இல்லை, அவர் என்னுடைய அம்மா. ரக்சிதாவுக்கு மாமியார் என கூறியதை கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர் என்றும் கூறியிருந்தனர்.

கடந்த ஆண்டு 2022ல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரக்சிதா மகாலட்சுமி பங்கேற்றார். அதுவரை டிவி சீரியலில் எப்படி நல்ல பெயர் கிடைத்ததோ, அதே போல் பிக்பாஸ் வீட்டுக்குள் மிக சிறந்த பெண்ணாக, அவர் நடந்துக்கொண்டார். எந்தவிதமான சர்ச்சை, விமர்சனமும் அவர் மீது எழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகவும் அமைதியாக நடந்துக்கொள்வதே அவரது இயல்பாகி விட்டது.

- Advertisement -

இப்போது நடந்துக்கொண்டு இருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரக்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ் ஒயில்டு கார்டு மூலம் வீட்டுக்குள் சென்றுள்ளார். ஒரு டாஸ்க் நிகழ்ச்சியில் தனது காதல், திருமணம் குறித்து தினேஷ் மிகவும் உருக்கமாக பேசினார். தன் மனைவி மீதுள்ள அளப்பரிய காதலை, அவர் வெளிப்படுத்தியதை பார்த்த மற்ற ஹவுஸ்மேட்டுகள் அவருக்கு ஆறுதல் கூறினர்.

இதைக்கேட்ட பலரும், ரக்சிதாவை போனில் அழைத்து தினேஷ் குறித்து பேசியுள்ளனர். அதில் ஆவேசமடைந்த ரக்சிதா, தனது டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில், கணவர் தினேஷ்க்காக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள் தரப்பு நியாயத்தை கர்மா அழகாக சொல்லும். அமைதியாக இருப்பது நல்லது. மற்றவற்றை கர்மா பார்த்துக்கொள்ளும் என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம், தன் மனைவி மீதான காதலை, அன்பை எவ்வளவு தூரம் வெளிப்படுத்தியும் ரக்சிதா மனதில், அவர் மீதான வெறுப்பும், கோபமும் அதிகமாக இருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.

- Advertisement -

சற்று முன்