- Advertisement -
Homeபொழுதுபோக்குமிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் நடிகர் தனுஷ் படம், ராயன் தந்த உத்வேகமா? - இந்த படத்தில்...

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் நடிகர் தனுஷ் படம், ராயன் தந்த உத்வேகமா? – இந்த படத்தில் இந்த ஹீரோக்கள் நடிக்கிறாங்களா? போட்றா வெடிய

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக, இயக்குனராக அசத்திக்கொண்டு இருக்கிறார். சொந்த வாழ்க்கையில் பல சரிவுகளை சந்தித்தாலும், சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

குறிப்பாக சமீபத்தில் வெளியான அவரது 50வது படம் ராயன், அவரே இயக்கி நடித்தார். அந்த படம் இந்த ஆண்டில் வெளிவந்த தமிழ் படங்களில் 100 கோடி வசூலை கடந்த மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதே போல் இந்த ஆண்டில் அரண்மனை 4, மகாராஜா, தி கோட் படங்களும் 100 கோடி வசூலை கடந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராயன் படம் தந்த அபார வெற்றியைத் தொடர்ந்து இப்போது நடிகர் தனுஷ் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா டைரக்ட் செய்துள்ளார். ராஸ்மிகா மந்தனா தனுஷூக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் நாகார்ஜுனாவும் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தெரிகிறது.

குபேரா படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். அந்த படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது. அத்துடன் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமான இளையராஜா என்ற படத்தை அருண் மாதேஸ்வரன் 2 பாகங்களாக டைரக்ட் செய்கிறார். அந்தப் படத்திலும் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார்.

இந்த சூழ்நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். அத்துடன்அறிமுக இயக்குனர் ஆகாஷ் என்பவர் தயாரிக்கும் ஒரு புதிய படத்தை தனுஷ் இயக்கவும் உள்ளார். அந்த படத்தின் லொக்கேஷன் பார்ப்பதற்காக இப்போது நடிகர் தனுஷ் தேனி தேனி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய படத்துக்கான பட்ஜெட் 120 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதுவரை நடிகர் தனுஷ் படங்களில் அதிகபட்ச பட்ஜெட்டில் எடுக்கப்படும் முதல் படமாகவும் இது உள்ளது. இதில் வில்லன் கேரக்டரில் நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளார் என்று தகவல் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இவர் என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிப்பதற்காக நடிகர் அசோக் செல்வனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதனால் இந்த படத்தில் அவரும் நடிப்பார் என்பது உறுதியாகி உள்ளது.

சற்று முன்