- Advertisement -
Homeபொழுதுபோக்குகில்லி படத்தின் வெற்றிக்கு காரணம் விஜய் அல்ல; பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு -...

கில்லி படத்தின் வெற்றிக்கு காரணம் விஜய் அல்ல; பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு – என்னய்யா இது, ஆளாளுக்கு இப்படி கௌப்பி விடறாங்க…?

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க 200 கோடி ரூபாய் வாங்கும் முன்னணி ஹீரோ விஜய் ஒருவர் மட்டும்தான். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் கடந்த 20 ஆம் தேதி வெளியான நிலையில், இதுவரை 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு பின் ரி ரிலீஸ் செய்யப்பட்ட பழைய படம், இவ்வளவு பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்திருப்பது இதுவே முதல் முறை என்று தமிழ் சினிமாத்துறையினர் ஆச்சரியத்தில் உள்ளனர். நடப்பாண்டில் 2024 ஜனவரி முதல் இதுவரை தமிழ் சினிமாவில் வந்த எந்த ஒரு படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 100க்கும் மேற்பட்ட படங்கள் வந்த நிலையில், ஒரு படம் கூட ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக அமையவில்லை.

- Advertisement -

ரஜினிகாந்த் நடித்த லால் சலாம், சிவகார்த்திகேயன் நடித்த அயலான், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் போன்ற படங்கள் கூட பெரிய அளவில் மக்கள் மனதில் நிற்கவில்லை. ஆனால் மலையாளத்திலிருந்து வெளிவந்த மஞ்சம்மெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், பிரேமலு, பிரமயுகம், ஆவேசம் போன்ற மலையாள படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

இந்த சூழலில் தான் ரி ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படம், மலையாள படங்களுக்கு சவால் விடும் வகையில், 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்து தியேட்டர்களில் சக்கை போட்டு வருகிறது. கில்லி படம் குறித்து டைரக்டர் வெங்கடேஷ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, விஜய் காதல் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, பகவதி என்ற படத்தை நான் எடுத்தேன். இந்த படத்தில் அவருக்காக பல ஆக்சன் சீன்களை நான் வைத்திருந்தேன். விஜய் இந்த காட்சிகளில் நடிக்கும்போது மிகவும் பயந்தார்.

- Advertisement -

இது எனக்கு ஒர்க்அவுட் ஆகுமா, ரொம்பவும் ஜாஸ்தியா இருக்கிற மாதிரி தெரியுது என்று என்னிடம் குறிப்பிட்டார். ஆனால் நிச்சயமாக இந்த படம் உங்களை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும் என்று கூறினேன். அதன் பின்னர் தொடர்ந்து விஜய் இன்று வரை ஆக்சன் ஹீரோவாக அசத்தி வருகிறார். கில்லி படத்தின் வெற்றிக்கு காரணம் அப்படி போடு என்ற பாடலோ, நடிகர் விஜயோ காரணம் அல்ல.

கில்லி படத்தின் வெற்றிக்கு கன்டென்ட் தான் காரணம். பொதுவாக வெற்றி பெறும் படங்களுக்கு இடையே ஒரு ஒற்றுமை இருக்கும். அந்த படத்தின் கதை, சிச்சுவேசன் புதுசாக இருக்கும். இப்போதும் ரசிகர்கள் கூட்டமாக கூட்டம் வரக் காரணம், அந்த படத்தில் இருக்கும் கன்டென்ட் தான். வில்லன் ஊருக்குச் சென்று வில்லன் கட்டிக்கப் போற பொண்ணையே தூக்கிட்டு வந்து, அந்த பொண்ணையே தேடுற அப்பா போலீஸ்க்கே தெரியாமல், அவர் வீட்டில் மறைத்து வைத்தது எல்லாம் தான் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்று டைரக்டர் ஏ வெங்கடேஷ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்