- Advertisement -
Homeபொழுதுபோக்குதியேட்டர்களில் கொட்டுக்காளி ரிலீஸ் சிவகார்த்திகேயன் செய்த வன்முறை, இயக்குனர் அமீரின் ஆவேசப் பேச்சுக்கு, மாவீரன் பட...

தியேட்டர்களில் கொட்டுக்காளி ரிலீஸ் சிவகார்த்திகேயன் செய்த வன்முறை, இயக்குனர் அமீரின் ஆவேசப் பேச்சுக்கு, மாவீரன் பட தயாரிப்பாளர் பதிலடி – கிளம்பிய இன்னொரு புது பஞ்சாயத்து…

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான படம் கொட்டுக்காளி. இந்த படத்தில் சூரி கதாநாயகனாகனும், அன்னா பென் நாயகியாகவும் நடித்துள்ளனர். பின்னணி இசை இல்லாமல் இந்த படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சிலர் பாராட்டவும் செய்கின்றனர். பலர் மிக மோசமான படம் என விமர்ச்சிக்கவும் செய்கின்றனர்.

ஆனால் வழக்கமான ஜனரஞ்சக அம்சங்கள் இல்லாத கொட்டுக்காளி போன்ற படங்கள், விருதுகளுக்கு மட்டுமே தகுதியானவை என்றும் ஒரு கருத்து பரவி வருகிறது. இதற்கிடையே கொட்டுக்காளி படம் குறித்து பேசிய இயக்குனர் அமீர், வணிக நோக்கத்தில் லாபம் கருதி கொட்டுக்காளி போன்ற விருது படத்தை தியேட்டர்களில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்தது மிகப்பெரிய வன்முறை என்று பேசியிருந்தார்.

நானாக இருந்தால், கொட்டுக்காளி போன்ற படத்தை ஓடிடியில் மட்டுேம ரிலீஸ் செய்திருப்பேன். இதுபோன்று விருதுக்குரிய படங்களை கமர்ஷியல் நோக்கத்துக்காக தியேட்டர்களில் வெளியிடுவது மிகப்பெரிய தவறு, இது படம் குறித்த மோசமான விமர்சனத்தை ஏற்படுத்துகிறது என்பது போன்ற ஒரு கோணத்திலும் தனது கருத்தை கூறியிருந்தார்.

அதே நேரத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படம் வெளியான நேரத்தில், கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்தது, வாழை படத்தை இருட்டடிப்பு செய்வதாக கருதியே இயக்குனர் அமீர் இப்படி கருத்தை சொன்னதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இயக்குனரின் இந்த கருத்து குறித்து நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சூரி இதுவரை வாய் திறந்து எந்த பதிலும் சொல்லவில்லை.

ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படத்தை இயக்கிய தயாரிப்பாளர் அருண் விஸ்வா இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், ஒரு படத்துடன் மற்றொரு படத்தை வெளியிடக் கூடாது என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும். பெரிய படங்களுடன் சிறிய படங்களை வெளியிடக் கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்?

அமீரின் இந்த வார்த்தைகளில்தான் அதிக வன்முறை உள்ளது. சர்வதேச தரத்திலான படத்தை, தியேட்டர்களில் ஏன் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்கும் அமீர், அவர்கள் நமது தமிழ் சினிமா ரசிகர்கள் சர்வதேச தரப்பில் நல்ல ரசிகர்களாக இல்லை என்று கூறுகிறாரா என்று தெரியவில்லை. சமூக நீதி பேசும் அமீர் போன்ற இயக்குனரிடம் இருந்து இதுபோன்ற கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை, என்று அருண் விஸ்வா தனது கருத்துகளை கூறியிருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சற்று முன்