- Advertisement -
Homeபொழுதுபோக்குமார்க் ஆண்டனிக்கு பிள்ளையார் சுழி போட்டது அஜித்சார் தான்... ஏ.கே.வின் வார்த்தைகளை கூறி நெகிழ்ந்த இயக்குனர்...

மார்க் ஆண்டனிக்கு பிள்ளையார் சுழி போட்டது அஜித்சார் தான்… ஏ.கே.வின் வார்த்தைகளை கூறி நெகிழ்ந்த இயக்குனர் ஆதிக்…

- Advertisement -

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் – விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும், “கேங்ஸ்டர்னா டிசிப்ளினா இருக்கணும்” என எஸ் ஜே சூர்யா கூறும் வசனம் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் ட்ரெய்லரில் மறைந்த சில்க் ஸ்மிதாவின் கேரக்டரை கொண்டு வந்த விதம், பஞ்சு மிட்டாய் பாடலின் ரீமிக்ஸ் ஆகியவை நன்றாக இருப்பதால் ட்ரெய்லரை திரும்பத் திரும்ப பலர் பார்த்து வருகின்றனர். தொடர் தோல்வி படங்களால் துவண்டு கிடக்கும் விஷாலுக்கு, இந்த படம் நிச்சயம் திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் அடுத்தடுத்த தோல்விகளால் சிக்கி தவித்து வந்தார். திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே பரபரப்பாக பேசப்பட்டார். படத்திற்கு பக்காவாக இசையமைத்து நடிக்கவும் செய்த ஜிவி பிரகாஷ், காதலைத் தேடி அலையும் இளைஞரின் தவிப்பை கண்முன்னே காட்டி இருந்தார்.

இளைஞர்களை சீரழிக்கும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாக பலர் குற்றம் சாட்டினாலும், திரிஷா இல்லனா நயன்தாராவின் வசூல் மட்டும் எகிறியது. இந்தத் திரைப்படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தை இயக்கினார் ஆதி ரவிச்சந்திரன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை சந்திக்க, சிம்பு மீதும், ஆதிக் மீதும் விமர்சனங்கள் இருந்தன.

- Advertisement -

படத்தின் தோல்விக்கு காரணம் சிம்புதான் என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டினார். இது ஒரு பக்கம் இருக்க அடுத்த பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த ஆதிக், அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தார். பின்னர் பிரபுதேவாவை வைத்து பகிரா எனும் திரைப்படத்தை இயக்கிய அவர், தற்போது மார்க் ஆண்டனியை இயக்கியிருக்கிறார். இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆதிக்கிடம், தளபதி விஜய், இயக்குனர் நெல்சன் லோகேஷ் மற்றும் அட்லி ஆகியோரை ஊக்கப்படுத்தியது போல, உங்களையும் அஜித் ஊக்கபடுத்தியதாக செய்தி வெளியானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் கூறிய ஆதிக், “இது பற்றி ஏற்கனவே சில இயக்குனர்கள் தெரியப்படுத்தி விட்டார்கள். அஜித் சார் ஒரு கிங் மேக்கர். அவர்தான் என்னை சிறிய படங்கள் இயக்குவதை விட பெரிய படத்திற்கு தயாராகுமாறு ஊக்கப்படுத்தினார். அந்த வார்த்தையை நான் மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டேன். மார்க் ஆண்டனி உருவாகுவதற்கு தொடக்கப் புள்ளி அஜித் சார் தான். அவருக்கு நான் ஒரு ரசிகனாக எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார். இயக்குனரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்