- Advertisement -
Homeபொழுதுபோக்குகாயத்ரி ரகுராம், கவுதமியை தொடர்ந்து பாஜக வை விட்டு வெளியேறிய பிரபல நடிகை - அரசியல்ல...

காயத்ரி ரகுராம், கவுதமியை தொடர்ந்து பாஜக வை விட்டு வெளியேறிய பிரபல நடிகை – அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

- Advertisement -

தமிழில், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை விஜயசாந்தி. நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே மிரட்டும் அளவுக்கு, எதிர்த்து நடிக்கும் நடிகையாக ஒருவர் இருந்தார் என்றால், அது விஜயசாந்தி மட்டும்தான். மன்னன் படத்தில், ரஜினிக்கு மனைவியாக நடித்து அசத்தினார்.

தொடர்ந்து தமிழில் பல படங்களில் விஜயசாந்தி நடித்தார். தெலுங்கில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்ட பல படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்திருந்தது விஜயசாந்தி தான். இவரது படங்களில் மிகவும் முக்கியமான படம் வைஜெயந்தி ஐபிஎஸ். இவரை தான் முதலில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்தனர். இப்போது நயன்தாராவுக்கு அந்த பட்டம் வந்துவிட்டது.

- Advertisement -

இந்திரன் சந்திரன் படத்தில், கமலுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கு படங்களில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணன் போன்ற பலருக்கு ஜோடியாக நடித்த இவர், தனியாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் அதிகமாக நடித்திருக்கிறார்.

சினிமாவில் நடிப்பது அலுத்து போய்விட்டாலோ அல்லது, சினிமாவில் போதிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலோ, நடிகர் நடிகைகள் படை எடுப்பது அடுத்தது அரசியலை நோக்கித்தான். அதற்கு விஜயசாந்தி மட்டும் விதிவிலக்கல்ல. சொற்பமான படங்களில் நடித்து வந்த அவருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது.

- Advertisement -

இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டில், சந்திரசேகர் ராவ் நடத்தி வரும் பிஎஸ்ஆர் கட்சியில் சேர்ந்து, அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு, பார்லிமென்ட் தேர்தலில் சீட் வழங்கப்பட்டது. மேடக் லோக்சபா தேர்தலில் ஜெயித்து விஜயசாந்தி எம்பி ஆனார்.

தொடர்ந்து அந்த கட்சியை உதறித் தள்ளிய விஜயசாந்தி கடந்த 2020ல், பாஜகவில் இணைந்தார். தெலுங்கானா தேர்தல் வரும் 30ம் தேதி நடக்கிற நிலையில், அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் தரவில்லை. இதனால் மனம் வெறுத்த விஜயசாந்தி இன்று, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே முன்னிலையில் காங்கிரஸ்சில் இணைந்தாா். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்