- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று தணிக்கை வாரியம் தேவையற்றது… அது காலாவதியானது - இயக்குனர் ராம்கோபால் வர்மா மற்றும் மாரி...

இன்று தணிக்கை வாரியம் தேவையற்றது… அது காலாவதியானது – இயக்குனர் ராம்கோபால் வர்மா மற்றும் மாரி செல்வராஜ் விக்ரமன் கண்டனம்!

- Advertisement -

ஜனநாயகன் படம் சென்சார் விவகாரத்தில் வெளியிடாமல் முடங்கியது குறித்து திரைபிரபலங்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கை துறை நிகழ்த்தி இருப்பது அப்பட்டமான அநீதி தான்.

ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெரும் குரல் எழுப்புவோம் என்று அதில் மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார். இதேபோல் நடிகர் விஜய் நடித்த பூவே உனக்காக வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குனர் விக்ரமனும் தனது கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து இயக்குனர் விக்ரமன் கூறியிருப்பதாவது, ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு இடையூறாக இருப்பது ஜனநாயக படுகொலை. ஒட்டுமொத்த திரைத்துறையும் தமிழ் சினிமா ரசிகர்களும் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். ஆயிரம் கைகள் எதிர்த்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை தாமதமாக வந்தாலும் மிகப்பெரிய வசூல் சாதனையை புரிந்து விஸ்வரூப வெற்றி அடைய ஜனநாயகனுக்கு வாழ்த்துக்கள் என்று இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார்.

இதே போல் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டுள்ள தணிக்கை சிக்கல்கள் குறித்து மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக பார்த்தால் தணிக்கை வாரியம் ஒன்று தேவை என்று நினைப்பதே உண்மையில் முட்டாள்தனமானது. தணிக்கை வாரியம் என்பது காலாவதியான ஒரு பழைய முறை. அது இன்று தேவையே இல்லை.

- Advertisement -

ஆனாலும் இந்த காலத்துக்கு இது தேவையா என்று யாரும் கேள்வி கேட்க துணியாதாலேயே அது இன்னும் நீடிக்கிறது. இதற்கு திரைத்துறையின் மெத்தன போக்குதான் மிக முக்கியமான காரணம். இன்று 12 வயது சிறுவன் ஒருவன் தனது அலைபேசியில் தீவிரவாதிகளில் நடத்தும் கொடூர தாக்குதல்களை பார்க்க முடிகிறது. 9 வயது சிறுவன் ஆபாச பக்கங்களுக்குள் நுழைய முடிகிறது ஓய்வு பெற்ற ஒருவர் தனது நேரத்தை கழிக்க தீவிரவாத பிரச்சாரங்கள் சதித்திட்ட கோட்பாடுகள் போன்றவற்றை உலகத்தில் இருந்து எவ்வித தடையும் இன்றி பார்க்க முடிகிறது.

இவை அனைத்தும் எந்த தணிக்கையும் இல்லாமல் உடனடியாக கிடைக்கின்றன. இப்படியான ஒரு யதார்த்த நிலையில் படத்தில் வரும் ஒரு வார்த்தையை நீக்குவதாலோ ஒரு காட்சியை வெட்டுவதாலோ அல்லது சிகரட்டை மறைப்பதாலோ சமுதாயத்தை பாதுகாத்து விடலாம் என்பது தணிக்கை வாரியம் நம்புவது ஒரு நகைச்சுவை. நம்மை யார் ஆள வேண்டும் என்று தீர்மானிக்கும் அறிவு நமக்கு இருக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதைக் கேட்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அறிவு நமக்கு இல்லையா? என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்