- Advertisement -
Homeபொழுதுபோக்குஏதே... அமலாபாலின் முன்னாள் கணவர் இந்த நடிகையுடன் இணையப் போகிறாரா... ஷாக் அடிக்கும் தகவல்...

ஏதே… அமலாபாலின் முன்னாள் கணவர் இந்த நடிகையுடன் இணையப் போகிறாரா… ஷாக் அடிக்கும் தகவல்…

- Advertisement -

அஜித்தின் கிரீடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ எல் விஜய். தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் மகனான இவர், இயக்குனர் பிரியதர்சனிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். பின்னர் அஜித் கொடுத்த வாய்ப்பின் மூலம் இயக்குனராக அறிமுகமாக, முதல் திரைப்படத்திலேயே பலராலும் அவர் கவனிக்கப்பட்டார்.

இதன் பிறகு நகைச்சுவையை கையில் எடுத்த அவர், பொய் சொல்ல போறோம் திரைப்படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றாலும், அந்த நேரத்தில் மிகப்பெரிய தோல்வியை அது அடைந்தது. பின்னர் இரண்டு வருடங்கள் காத்திருந்து, மதராசபட்டினம் என்னும் காதல் காவியத்தை ரசிகர்களுக்கு படைத்தார் ஏ எல் விஜய்.

- Advertisement -

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு ஆங்கிலேய பெண்ணுக்கும் தமிழ் இளைஞனுக்கும் இடையே ஏற்படும் காதலை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருந்தார் அவர். இந்தத் திரைப்படம் இயக்குனர் ஏ எல் விஜய் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. முதல்முறையாக பலராலும் அவர் பேசப்பட்டார்.

இதற்கு அடுத்த வருடமே விக்ரமை வைத்து தெய்வத்திருமகள் திரைப்படத்தை ஏ எல் விஜய் இயக்கினார். மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை மகளுக்கு இடையான பாசத்தை சொல்லி உருக வைத்த அவர், சபாஷ் போட வைத்தார். ஜிவி பிரகாஷின் இசையும் இதில் ரசிகர்களை அசர வைத்தது. இதன்பிறகு தளபதி விஜய் வைத்து தலைவா திரைப்படத்தை இயக்கினார் ஏ எல் விஜய்.

- Advertisement -

தெய்வத்திருமகள் மற்றும் தலைவா திரைப்படத்தின் சூட்டின் போது அமலா பாலுக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்ய, தம்பதியர் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரிந்தனர். இதன்பிறகு ஏ.எல். விஜய் மறுமணம் செய்து கொண்டார். இதேபோல் அமலாபாலும் சமீபத்தில் அவர் ஆண் நண்பரை திருமணம் செய்தார். இது ஒரு பக்கம் இருக்க சமீப காலமாக ஏஎல் விஜய் ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

இது என்ன மாயம், தேவி, வனமகன், தியா, லட்சுமி, வாட்ச்மேன், தேவி 2, தலைவி என அவர் எடுத்த அத்தனை திரைப்படங்களுமே தோல்வியில் முடிவடைந்தன. தற்போது அருண் விஜய் வைத்து அச்சம் என்பது இல்லையே படத்தை அவர் எடுத்து முடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக மாதவனுடன் இருக்கிறார். இதில் கதாநாயகியாக கங்கன ராணாவத் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது.

- Advertisement -

சற்று முன்