- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியை வைத்து அந்த அரசியல் பண்ணாதீங்க, இயக்குனர் அமீர் ஆவேசம் - இரவில் அமீரை அழைத்து...

ரஜினியை வைத்து அந்த அரசியல் பண்ணாதீங்க, இயக்குனர் அமீர் ஆவேசம் – இரவில் அமீரை அழைத்து பேசிய சூப்பர் ஸ்டார் சொன்ன அந்த ஒரு வார்த்தை!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் அமீர் கூறியதாவது, நானும் சின்ன வயசுல இருந்து பார்க்கிறேன். பாக்கு விளம்பரத்தில் இருந்து தேர்தல் விளம்பரம் வரைக்கும் ரஜினிகாந்தை பயன்படுத்தறீங்க. இங்கே உள்ளவங்க தான் பயன்படுத்தறீங்க. இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இங்கே தமிழ்நாட்டில் இருக்கிற ரஜினிகாந்த் 2 அல்லது 3 படங்கள் தான் வெளி புரடியூசர்களுக்கு பண்ணினது.

கன்னடத்தை சேர்ந்த துவாரகீஸ்ன்னு ஒருத்தர். அவர் தயாரிப்பாளர் மட்டுமல்ல. நடிகராகவும் இருக்கிறார். உயரம் குறைவானவர். கவ் பாய் குள்ளன் படம் கேள்விபட்டு இருப்பீர்கள். அந்த படத்தின் ஹீரோ அவர்தான். அவர் ஒரு கன்னட தயாரிப்பாளர். நடிகர். ஹீரோவாகவும் காமெடி நடிகராகவும் இருந்திருக்கிறார். அவரது துவாரகை பிக்சர்ஸ் தயாரித்த படங்கள்தான் நான் அடிமை இல்லை. அடுத்த வாரிசு ரஜினி நடித்த படங்கள்.

- Advertisement -

அவருக்கு மட்டுமே 2 அல்லது 3 படங்கள் ரஜினி பண்ணினார். அதன்பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாமே தமிழ் புரடியூசர்ஸ்களுக்கு தான் பண்ணினார். ஏவிஎம் நிறுவனம் கலைஞானம் பஞ்சு அருணாசலம் என்றுதான் படம் செய்தார். அவர் திருமணம் செய்தது ஒரு தமிழ் பெண்ணை. அவரது மகள்களுக்கு திருமணங்கள் செய்ததும் இங்கே தான். இப்படிதான் அவர் இருந்திருக்கிறார்.

இதுக்கு மேல அவர் மேல நெத்தியில் நீங்க ஒரு பச்சை தமிழன் என்று பச்சையா குத்த முடியும்? காவிரி நீர் பிரச்னையில் கூட ரஜினி கொடுக்க வேண்டாம் என்று சொன்னாரா? சொல்லி இருந்தார்ன்னா சொல்லுங்க. அந்த பக்கம் நின்று இருந்தாருன்னா? அப்போ இந்த அரசியல் வேணாம். உண்மையில் நீர் பிரச்னையை மட்டும் பேசுங்க. ரஜினியை கன்னடன் என்று சொல்கிற அந்த அரசியல் தேவையற்றது என்று நான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.

- Advertisement -

அந்த புத்தத்தை படித்து விட்டு இரவு 9 மணிக்கு ரஜினிகாந்த் என்னை போனில் அழைத்து பேசினார். அப்போது நான் அரசியல் புத்தகங்கள் பெரும்பாலும் படிப்பதில்லை. ஆனா உங்க புக் கொண்டு வந்து கொடுத்தாங்க. படித்தேன். எனக்கு மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது.

இப்படிதான் பலர் என் குடும்பத்தை பற்றி விமர்சித்து தனிமைப்படுத்தும் பார்வையை உருவாக்குகின்றனர். நீங்கள் என்னுடைய பிரண்டு என்றார். அது உண்மையில் மிகப்பெரிய வார்த்தை. அவரது உயரத்தில் நான் மிக சாதாரணமானவன். என்னை அவர் அப்படி குறிப்பிட்டது பெரிய விஷயம் என்று இயக்குனர் அமீர் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்