பாலிவுட்டில் பிரபல இயக்குனராக நடிகராக வலம் வந்துக்கொண்டு இருந்தவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நடிகை நயன்தாரா அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் என்ற படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். இவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இவருக்கு இயக்குனர் மகிழ் திருமேனி தனது கம்பீர குரலில் பின்னணி பேசியிருந்தார்.
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் கேமியோ ரோலில் ஒரு காட்சியில் மட்டுமே நடிகர் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் அனுராக் காஷ்யப் பிரதான வில்லன் கேரக்டரில் நடித்து ரசிகர்களை மிரட்டி இருந்தார்.
இந்தி படங்களை இயக்கிய இந்தி படங்களில் நடித்து வந்த இயக்குனர் அனுராக் காஷ்யப், இந்தி திரைப்படத்துறையில் உள்ள பணி கலாச்சாரம் தனக்கு பிடிக்கவில்லை. அதனால் பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேறுவதாக சில மாதங்களுக்கு முன் அதிரடியாக அறிவித்தார். ஏனெனில் ஹீரோக்களை மையப்படுத்திய ஒரே மாதிரியான படங்கள் கதைகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் அனுராக் காஷ்யப் சினிமா சார்ந்த பல விஷயங்களை மனம் திறந்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அப்போது பான் இந்தியா படங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஏனெனில் சமீபகாலமாக இந்திய சினிமாவில் பான் இந்தியா படங்களே அதிகளவில் உருவாகின்றன.
பான் இந்தியா படங்கள் குறித்து இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் கூறியதாவது, என்னுடைய கருத்துப்படி பான் இந்தியா படங்கள் என்பது ஒரு மிகப்பெரிய மோசடி. ஒரு படத்தை உருவாக்க 3 முதல் 4 ஆண்டுகளே ஆகும். பலர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அந்த படத்தை சார்ந்து இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறையும் அதை பொறுத்தது.
ஒரு படத்திற்காக செலவிடப்படும் பணம் முழுவதும் படத்தை தயாரிப்பதற்கு செல்வதில்லை அப்படி செய்தாலும் அது பெரும்பாலும் மிகப்பெரிய யதார்த்தமற்ற ஷெட்களில் செலவிடப்படுகிறது. இதில் எந்த அர்த்தமும் இல்லை. இது போன்ற படங்களில் ஒரு சதவீதம் மட்டுமே வெற்றி பெறுகிறது என்று இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





