- Advertisement -
Homeபொழுதுபோக்குஏஆர் முருகதாஸ் போட்ட கண்டிஷன், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவை நிழல் போல கண்காணிக்கும் நபர் -...

ஏஆர் முருகதாஸ் போட்ட கண்டிஷன், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவை நிழல் போல கண்காணிக்கும் நபர் – அடக்கி வாசிக்கும் சிவகார்த்திகேயன்

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சியை துவக்கத்தில் நடத்திக்கொண்டு இருந்தவர். பிறகு நடிகர் தனுஷ், இயக்குநர் பாண்டிராஜூடன் நட்பு ஏற்பட்ட நிலையில் சினிமாவுக்குள் வந்தார். மெரினா படத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர், ரஜினி முருகன், ரெமோ, காக்கிச்சட்டை, மனம் கொத்திப்பறவை, வேலைக்காரன் போன்ற பல படங்கள் நல்ல வெற்றியை கொடுக்க, முன்னணி நடிகர்களின் ஒருவராக சிவகார்த்திகேயன் மாறினார்.

- Advertisement -

எனினும் மிஸ்டர் லோக்கல், டான், ஹீரோ, சீமராஜா, பிரின்ஸ் போன்ற சில படங்கள் பலத்த பிளாப் படங்களாக அமைந்தன. எனினும் மாவீரன், டாக்டர் போன்ற படங்களில் மீண்டு வந்த சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமாரின் அயலான் படத்தை பெரிதாக நம்பினார்.

ஆனால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வித்யாசமான கதைக்களம், ஏலியன் பொம்மை என படம் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் இந்த படத்துக்கு போதிய ஆதரவு தரவில்லை. அதனால் இந்த படமும் சிவகார்த்திகேயனுக்கு பலத்த ஏமாற்றத்தையே கொடுத்தது.

- Advertisement -

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்து வெளிவர உள்ள அமரன் படத்தை தான் சிவகார்த்திகேயன் பெரியதாக நம்பியிருக்கிறார். அத்துடன் இப்போது ரூ. 70 கோடி பட்ஜெட்டில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பு செலவு ரூ. 13 கோடிதான். ஏனெனில் சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 30 கோடி, ஏஆர் முருகதாஸ் சம்பளம் ரூ.20 கோடி, இசையமைப்பாளர் அனிருத் சம்பளம் ரூ. 7 கோடி என மொத்தம் 57 கோடி ரூபாய், 3 பேர் சம்பளமாக போன பின்பு, மீதி உள்ள ரூ. 13 கோடியில்தான் இந்த படம் உருவாகிறது.

இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் எல்லாமே அவரது நடை, உடை, பாவனை, பேச்சு, மேனரிசங்கள் எல்லாமே ரஜினியை சார்ந்தும், கொஞ்சம் அவரது ஸ்டைலிலும் இருக்கும். இந்த படத்தில் அந்த பழைய சிவகார்த்திகேயனின் அடையாளமே ஒரு காட்சியிலும் இருக்க கூடாது என, முருகதாஸ் கண்டிசன் போட்டுள்ளார். இதற்காக நடிப்பு பயிற்சியாளர் ராஜேஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் அவர் சிவகார்த்திகேயனை ஷூட்டிங் ஸ்பாட்டில் நிழல் போல பார்த்து, பார்த்து அவரது மேனரிசமே இல்லாமல் நடிக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளில் எங்குமே பழைய சிவகார்த்திகேயன் இல்லை என, டைரக்டரே பூரித்து போயிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்